Friday, 8 November 2013

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4


"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் .. அவன்...,"  என்று கண்ணதாசன் பாட போகிறதை அறிந்தோ என்னவோ, கடவுள் மனிதனாய் பிறந்து, அவனின் வாழ்க்கையை அனுபவித்து அதன் போக்கில் வரும் "ஏற்றத்தாழ்வுகளை" தான் கண்ட, கேட்ட, உணர்ந்த அனுபவத்தை வைத்து எதிர் கொள்ளும் சாதாரண மனிதனாகவே ராமன் வாழ்ந்துள்ளான்.

பொதுவாக ஓரு ஆணுக்கு, பெண்ணின் பால் இருக்கும் ஆர்வமானது அதீதம். சம வயது பெண்களிடம் அவர்களின் "பார்வை" தன் பால் ஈர்க்க கூச்சம், கோவம், அதிகாரம், அலட்டல், கெஞ்சல், கொஞ்சல் மற்றும் அன்பு என முயற்சி செய்யும் ஆண் ஒரு முதியவளிடம் நடந்து கொள்ளும் விதமே "அலாதி"யானது. 

சிறுவர்களுக்கு "முதியவள்கள்" ஒரு விளையாட்டு பொருள்! இங்கு வாலிப வயதினர்கோ அவர்கள் அன்பு சுரங்கம்!! முதிந்தவர்களுக்கோ அவர்களே எஜமானி!!! 

சிறு வயதில் கூனியிடம் விளையாண்ட ராமன், சபரி என்ற முதியவளை பார்த்தவுடன்..,  மனைவியை பறிகொடுத்த அவமானம் பொங்க, கூனியிடம் விளையாண்ட விளையாட்டு உறுத்த, சபரியின் அன்பில் கரைகிறான் ராமன்.

இஃது இயல்பு தானே. அது மட்டுமல்ல, அவள் ஆணைக்கு இணங்க, மதங்க மலைநோக்கி பயணிக்கிறான். அங்கு யாரிடம் "நட்பு" வைக்க வேண்டும் என்பது வரை ராமனுக்கு சபரி சொல்லி அனுப்புகிறாள். 

இங்க ஒரு விசயத்தை கவனியுங்கள், சிறு வயதில் ஒரு பெண்ணின் வெறுப்பை சம்பாதித்து.., வாலிப வயதில் தன் புஜபலத்தை நிரூபித்து அதனால் ஒரு பெண் சம்பாதித்து.., அப்ப பார்த்து ஒரு பெண் வரம் பெற.., சம்பாதித்த பெண்ணையும் அழைத்து காட்டுக்கு வந்து அங்கு ஒரு பெண் இவன் சம்மதம் கேட்க இவன் மறுக்க அவள் கோவம் இவன் சம்பாதித்த பெண்ணை புடுங்கி செல்ல.., அவளை மீண்டும் கைப்பற்ற ஒரு பெண் வழி சொல்லுகிறாள்.- "என்ன கொடுமை சரவணா..."

ஆனால் உண்மையில் தொன்னூற்றி ஐந்து சதவீத ஆண்கள் இன்றும் இப்படிதான், நாளையும் இப்படிதான், "உணர்வான பெண்கள்" கை காட்டும் திசையிலே ஆண்களின் ஓட்டம் இருக்கும். இது தான் சராசரியான மனநிலையும் கூட., இது நம்ம ஊரு "குப்பன்", "சுப்பன்" முதல் அங்கிட்டு "பில் கிளிண்டன்"' "ஒபாமா" வரை ஒண்ணுதான். 

"சுக்ரீவன்", "அனுமன்: இவர்களிடம் ராமன் பழகிய விதமும் பெற்ற மற்றும் செய்த உதவிகளும் இன்றும் ஆண் நண்பர்களுக்குள் நடக்கும் "மனோபாவம்" தான், கூட்டணி அமைத்தல், உசுபேத்தி பலம் கொள்ள வைத்தல், ஸ்கெட்ச் போட்டு பொது எதிரியை அழித்தல், கொண்டாடுதல், கொண்டாடுவதை ரசித்தல் என்ற முறையில் தான் போகிறது. 

ராமன் வாலியுடன் நட்பு வைத்திருந்தால் அவன் பட்ட அவமானத்தை ஓரிரு நாட்களிலே துடைத்திருக்க முடியும்,. ஆனால். "வாலி "பலசாலி" உன்னால் அவனிடம் நேரடியாக மோதி வெல்ல முடியாது" என்று சுக்ரீவன் சொன்னதை ராமன் நம்பினான்., இன்னும் சொல்ல போனால் சுக்ரீவனின் ஆதரவும், நட்பும், அவன் நிலமையும் மற்றும் இருப்பும் அவனை நம்ப வைத்தது. இங்கு ஒருவேளை "விபீஷ்ணன்" போல ராமன் "மெய்பொருள்" அறிந்து சுக்ரீவனை வாலியிடம் காட்டி கொடுத்து வாலியிடம் சேர்ந்திருந்தால்.., ராவணன் தானே வந்து சீதையை ராமனிடம் ஒப்படைத்திருக்கலாம்.

பொதுவாக, ஆண்களுக்கு "தான்" என்ற இறுமாப்பு இருக்கும் தன்னை விட பலத்திலும் பொருளிலும் பெரியவர்களை பார்க்கும் போது ஒரு வித தாழ்ச்சியுடன் ஒதுங்கி போவதும், காழ்ப்புணர்வுடன் பார்பதும் சான்ஸ் கிடைத்தால் அவர்களை வெல்ல நினைப்பதும் இயல்பு.

இது ராமனுக்கு வேலை செய்திருக்க வேண்டும். "அவன் என்ன பெரிய "அப்பா டக்கர்" நேரடியாக வெல்ல முடியவில்லை என்றால் என்ன? என் மூளை பலத்தில் வெல்வேன், நான் யார் தெரியுமா? சிவ தனுசையே உடைத்தவானாக்கும்" என்ற கர்வமும், சுக்ரீவன் குழுவினர் தன் தலைமையை ஏற்க வைக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் ராமனை இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க வைத்திருக்க வேண்டும்.

                                                          - தொடரும்


இந்துவையும் மோகனையும் லூசில் விடுங்க.... பாசூ

        இந்துவையும் மோகனையும் லூசில் விடுங்க.... பாசூ


"THE HINDU" என்ற ஆங்கில சொற்களை, தமிழ் எழுத்துருவில் பதித்து கல்லா கட்ட நினைக்கும் ஒரு நாளிதழில், ஜெமோ இப்படி ஒரு கட்டுரை எழுதுகிறார், இதை அவர்களும் பிரசுரிக்கிறார்கள் என்றால் யாரை யார் நையாண்டி செய்கிறார்கள்? யாரை வைத்து யார் விளம்பரம் தேடுகிறார்கள்?? என்பது தான் தெரியவில்லை.

.இல்லை, "நான் மிக பெரிய அறிவாளி, "தப்பு அது என்ன?" ம்‌ம்..... "பகுத்தறிவு வாதி" "என் வார்த்தைகள் மூக்கனுக்கும் குப்பனுக்கும் புரியாது என்னையே மாதிரி உள்ள எளக்கியவாதிகளுக்கு மட்டும் புரியும்." என்று அவர் தளத்தில் சொன்ன மாதிரியே ஜெமோ சொன்னா!!!"

.அய்யோ, சாமீ! ஆமாம், சாமீ!! என்று ஒத்துக்குகோங்கோ.. அப்படியே அந்த வேலையை அவரை முதலில் செய்ய சொல்லுங்கள்... எந்த வேலையை?


Visnupuram, Aram matthuru thayir, kotti, palaiyaamugam ippadi avar eluthina anaitthum iintha maathiri maatri virpanaikku vida sollunga – appuram pichhckkum paarunga tamilil pakdikira aarvam tamil makkalukku, appadiye avar putthagam vikkum paarunga pooriyam thaandi...appuram  ..mukkiyama avar inaiyathalatthai muthalil ithai maathiri maatra solli elakkiyavaathigalidam vivaatham seiyya sollunga ..saameeeee…

இதையெல்லாம் பொயி ""பெருசா"" எடுத்துகிட்டு லூசில் விடுங்க.... பாசூ!! 

தானா "ஆடி" "ஆடி" அடங்கிடுவாங்க..... 


Friday, 1 November 2013

ஒரு நிகழ்வு - ஒருநாளிதழ் - ஒருதொகுப்பு - 3ஒரு நிகழ்வு - ஒருநாளிதழ் - ஒருதொகுப்பு - 3

 


காமன்வெல்த் மாநாடு: மன்மோகன் சிங் பங்கேற்கிறார்
By dn, புது தில்லி
First Published : 31 October 2013 04:45 AM IST


இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட கலந்து கொள்ளக் கூடாது: கருணாநிதி
By Web Dinamani, சென்னை

First Published : 31 October 2013 01:32 PM IST

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட கலந்துகொள்ளக்கூடாது என கருணாநிதி இன்று தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாடு : பிரதமரை சந்திக்கிறார் ஜிகே வாசன்
By dn, புது தில்லி
First Published : 31 October 2013 10:40 AM IST


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக பிரதமரை இன்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜிகே வாசன் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் உயர்மட்டக் குழு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில், பிரதமர் இலங்கை செல்வதுற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து பேச ஜி.கே. வாசன் இன்று பிரதமரை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, பிரதமல் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


காமன்வெல்த் மாநாடு: "பிரதமர் பங்கேற்றால் விளைவுகளை காங்கிரஸ் சந்திக்கும்'
By dn, சென்னை
First Published : 01 November 2013 02:37 AM IST


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அதற்கான விளைவுகளை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்பது உறுதியாகவில்லை
By dn, புது தில்லி
First Published : 01 November 2013 04:41 AM IST 

  கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என வெளியுறவுத் துறை கூறியுள்ளது. அதேநேரத்தில் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்வதற்கான முன்னேற்பாடுகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அனைத்தும் தினமணி நாளிதழில் வெளியானவை - படங்கள் - கூகுள்


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.