Powered By Blogger

Tuesday 31 December 2013

புத்தாண்டும் “நாற்பத்தியெட்டு” கேள்விகளும் அதன் பதில்களும் மற்றும் வாழ்த்துகளும்....!

புத்தாண்டும் “நாற்பத்தியெட்டு” கேள்விகளும் அதன் பதில்களும் மற்றும் வாழ்த்துகளும்....! 

பூமிபந்து "சுழன்று", "உருண்டு" தன் காலத்தின் ஒரு இன்னிங்சை முடித்து மீண்டும் அடுத்த இன்னிங்சை சூரியனின் இசைவுவுடன் தொடங்க இருக்கும்,- இந்நாளில். கடந்த வருடத்தின் "கடந்து" வந்த நினைவுகளுடன் ஒவ்வொருவரும், "சுழன்றும்", "உருண்டும்" கொண்டிருக்கும் பூமியை பற்றி பூமியுடன் இயைந்து அவரவர், அவர்களின் "வெற்றிகனியை" சுவைக்க வாழ்த்துகள்.
        
                  

எங்கு இருந்து "எடுத்தேன்" என்று நினைவில்லை, எந்த "தத்துவத்தின் விளக்கம்" என்றும் தெரியவில்லை ஆனாலும் என் "டேட்டா பேசில்" இருந்து புத்தாண்டு தினத்தில் நினைவுகூற "நாற்பத்தியெட்டு" கேள்விகளும் அதன் பதில்களும் ..,

  
  1. பூமியைவிட கனமானது எது?-----------தாயன்பு.
  2. ஆகாயத்தைவிட உயர்ந்தது எது?-----------தந்தையன்பு.
  3. காற்றைவிட வேகமானது?-------------------மனம்.
  4. புற்களைவிட அதிகமானது?-----------------கவலை.
  5. தூங்கும்பொழுதும் எது கண்களை மூடாது?-------------------மீன்
  6. பிறந்ததும் அசையாதது?--------------------முட்டை.
  7. இதயம் இல்லாதது?--------------கல்.
  8. வேகத்தால் வளர்வது?---------------நதி.
  9. நாடு கடந்து செல்பவனுக்கு யார் நண்பன்?-------வித்தை.
  10. வீட்டிலிருப்பவனுக்கு உற்ற தோழன்?-----------------மனைவி.
  11. நோயாளிக்கு யார் தோழன்?-------------------மருத்துவன்.
  12. மரணமடைகின்றவனுக்கு யார் தோழன்?-----------------தானம்.
  13. அனைத்து உயிர்களுக்கும் யார் விருந்தினர்?-----------அக்னி.
  14. எது அமிர்தம்?---------------------பால்.
  15. யார் அனைவருக்கும் ஒருவனாகத் தோன்றுகிறான்?-----------சூரியன்.
  16. பிறந்தவன் எவன் மறுபடியும் பிறக்கிறான்?--------------------------சந்திரன்.
  17. பனிக்கு மருந்து?------------------------அக்னி
  18. அனைத்தையும் அடக்கக்கூடிய பாத்திரம்?-----------------------பூமி.
  19. தருமம் எதில், முக்கியமான இடம் பெறுகிறது?--------------------முயற்சியில்.
  20. புகழ் எதில், முக்கியமான இடம் பெறுகிறது?---------------------தானத்தில்.
  21. சுகம் எதில், முக்கியமான இடம் பெறுகிறது?--------------------நல்லொழுக்கத்தில்.
  22. சொர்க்கம் எதில், முக்கியமான இடம் பெறுகிறது?---------------சத்தியத்தில்.
  23. மனிதனுக்கு ஆன்மா எது?--------------------------புதல்வன்.
  24. தெய்வம் தந்த துணை?----------------------மனைவி.
  25. மனிதனுக்கு முக்கியமான செயல் என்ன? --------- தர்மம்.
  26. செல்வத்தைக் கொடுப்பவற்றுள் முக்கியமானது எது?-----------சாமர்த்தியம்.
  27. பொருள்களில் எது உத்தமனானது? ------------------கலையறிவு.
  28. லாபங்களில் எது உத்தமனானது?----------------- நோயின்மை.
  29. சுகங்களில் எது உத்தமனானது? ------------------ திருப்தி
  30. உலகத்தில் சிறந்த தருமம் எது?-------------------- அகிம்சை.
  31. எதை அடக்கினால் துயரம் அடையார்? -------------- மனதை.
  32. யாருடன் ஏற்படும் நட்பு குறைவதில்லை?--------------- துறவிகளுடன்
  33. எதை விட்டால் துயரத்தை அடைவதில்லை?-------------------கோபத்தை
  34. எதை விட்டால் பொருள் உள்ளவனாகின்றான்?----------------காமத்தை.
  35. எதை விட்டால் சுகவாசியாகின்றான்? ----------------கஞ்சத்தை.
  36. எதற்காக வேலைக்காரனிடம் தருவது? ------------வசப்படுத்துவதற்காக.
  37. எதற்காக ஆள்பவனிடம் தருவது?--------------பயம் நீங்குவதற்காக.
  38. எதனால் உலகம் இருண்டுள்ளது?-----------------அறியாமையால்
  39. எதனால் மனிதன் சொர்க்கத்தை அடைவதில்லை? ----------- பற்று நீங்காததால்.
  40. எதனால் மனிதன் நண்பர்களை விடுகின்றான்? -------------- கஞ்சத்தனத்தால்
  41. மனிதன் எவ்வாறானால் மாண்டவனாகிறன்?------------வறுமையடைந்தால்
  42. நாடு எப்பொழுது உயிரற்றதாகிறது? -------------- ஆள்பவன் இல்லாதிற்கும்பொழுது
  43. எது நீர்? -------------ஆகாயம்
  44. எது விஷம்?-------------பெரியோர்களிடம் அபகரிக்கப்பட்ட பொருள்
  45. எது தவம்?-------------------தர்மம் செய்வது.
  46. எது தர்மம்? ----------------மனதை அடக்குதல்.
  47. எது சிறந்த பொறுமை? --------------- சுக துக்கங்களை பொறுத்துக் கொண்டிருத்தல்.
  48. எது ஞானம்? ------------- உண்மைப் பொருளை நன்கு அறிதலே ஞானம்.
   

Monday 30 December 2013

நம்மாழ்வார் நம்மை விட்டு பிரிந்தார்



நம்மாழ்வார் நம்மை விட்டு பிரிந்தார் 


ரசாயன உரங்கள் மண்ணிற்கு கேடு – “இயற்கை வேளாண் முறையே நமக்கும் மண்ணிற்க்கும் உயிர்” என்று நம்பி

 
 


அதை வேளாண் பெருமக்களிடம் பரப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்தி அதை செய்தும் காட்டிய இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் "டிசம்பர் 30, 2013" அன்று அந்தியில், பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் அவர் ரசித்த இயற்கையுடன் இணைந்தார்.

அவரை பிரிந்து வாடும் தமிழக மண்”, அவரது குடும்பத்தினர் மற்றும் வேளாண் பெருமக்கள் அனைவருக்கும் நமது ஆறுதலை செலுத்துவோம். அவரின் வழியில் நடந்து அவரின் கனவை நனவாக்குவோம்..