Powered By Blogger
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, 1 November 2013

ஒரு நிகழ்வு - ஒருநாளிதழ் - ஒருதொகுப்பு - 3



ஒரு நிகழ்வு - ஒருநாளிதழ் - ஒருதொகுப்பு - 3

 


காமன்வெல்த் மாநாடு: மன்மோகன் சிங் பங்கேற்கிறார்
By dn, புது தில்லி
First Published : 31 October 2013 04:45 AM IST


இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட கலந்து கொள்ளக் கூடாது: கருணாநிதி
By Web Dinamani, சென்னை

First Published : 31 October 2013 01:32 PM IST

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட கலந்துகொள்ளக்கூடாது என கருணாநிதி இன்று தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாடு : பிரதமரை சந்திக்கிறார் ஜிகே வாசன்
By dn, புது தில்லி
First Published : 31 October 2013 10:40 AM IST


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக பிரதமரை இன்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜிகே வாசன் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் உயர்மட்டக் குழு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில், பிரதமர் இலங்கை செல்வதுற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து பேச ஜி.கே. வாசன் இன்று பிரதமரை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, பிரதமல் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


காமன்வெல்த் மாநாடு: "பிரதமர் பங்கேற்றால் விளைவுகளை காங்கிரஸ் சந்திக்கும்'
By dn, சென்னை
First Published : 01 November 2013 02:37 AM IST


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அதற்கான விளைவுகளை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்பது உறுதியாகவில்லை
By dn, புது தில்லி
First Published : 01 November 2013 04:41 AM IST 

  கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என வெளியுறவுத் துறை கூறியுள்ளது. அதேநேரத்தில் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்வதற்கான முன்னேற்பாடுகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அனைத்தும் தினமணி நாளிதழில் வெளியானவை - படங்கள் - கூகுள்


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.




ஒரு நிகழ்வு - ஒருநாளிதழ் - ஒருதொகுப்பு - 2

ஒரு நிகழ்வு - ஒருநாளிதழ் - ஒருதொகுப்பு - 2


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது அவசியம்: சுதர்சன நாச்சியப்பன்
By Web Dinamani, சென்னை
First Published : 26 October 2013 07:23 PM IST


இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது அவசியம் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.


காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்ற கூடாது: கே.வி.தங்கபாலு
By விஜயக்குமார், சேலம்
First Published : 27 October 2013 08:41 PM IST


தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.

காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதை உறுதி செய்தார் சல்மான் குர்ஷித்
By Web Dinamani
First Published : 27 October 2013 06:01 PM IST

இலங்கையில் நடைபெற உள்ள காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தான் தமிழக மீனவர்கள் பிர்ச்சனை குறித்து பேசமுடியும். எனவே இந்தியா கலந்து கொள்வது உறுதி என இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இந்தியா கலந்து கொண்டால் தான் தமிழக மீனவர்கள் விடயம் குறித்து பேசமுடியும். எனவே இந்தியா கலந்து கொள்வது உறுதி என இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.


இந்திய உள்விவகாரங்களில் இலங்கைத் தூதர் தலையிடக் கூடாது: நாரயணசாமி கண்டிப்பு
By dn, காரைக்கால்
First Published : 27 October 2013 03:36 AM IST
 
 

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிடில், இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று கூறிய இலங்கைத் தூதர் கரியவாசத்துக்கு மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய உள்விவகாரங்களில் தலையிட அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சல்மான் குர்ஷித் முடிவு: தமிழகத் தலைவர்கள் அதிர்ச்சி; கண்டனம்
By dn, சென்னை
First Published : 28 October 2013 03:08 AM IST

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளது திமுக தலைவர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை பிரச்னை வேறு காமன்வெல்த் மாநாடு வேறு: சாக்கோ
By dn, புது தில்லி
First Published : 29 October 2013 02:38 AM IST


""இலங்கைப் பிரச்னை வேறு, அங்கு நடைபெறும் காமன்வெல்த் மாநாடு வேறு'' என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார் மன்மோகன்?
By dn, கொழும்பு
First Published : 29 October 2013 03:05 AM IST


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மட்டும் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக இலங்கை பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.


காமன்வெல்த்: இந்தியா பங்கேற்க தடை கோரிய மனு தள்ளுபடி
By dn, சென்னை
First Published : 30 October 2013 03:13 AM IST


இலங்கையில் நடைபெறும் காமல்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கத் தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

                                                       --- தொடரும்