Powered By Blogger

Sunday, 20 October 2013

ராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்



ராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்



ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2

 



ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை – என்ற இடுகையில் தேனி அவர்கள் கேட்டதன் விளக்கம்.


விளக்கத்திற்கு முன்பு சில புரிதல்கள் வேண்டும்.

விஷ்ணு எடுத்தாக கூறப்படும் தசாவதாரங்களில் முதல் ஐந்தும் அதாவது மட்ச, கூர்ம, வாரக, நரசிம்ம மற்றும் வாமனம் ஆகியவைகள் இறைவன் இறைவனாகவே இருப்பார், அந்த சில கணங்கள் மட்டும் அந்த வடிவமாக காட்சி தந்து காரியம் சாதிப்பார். ஆனால் குணம் என்பது மாறாமல் இறைவனாகவே இருக்கும். அதாவது சிவனின் திருவிளயாடால் போன்று எடுத்து கொள்ளலாம். 


பரசுராமம் என்பது பிறப்பு இருக்கிறது. ஆனால் எல்லா யுகத்திலும் அவர் வந்து போகிறார். அவரின் முடிவு என்பது எனக்கு தெரிந்தவரையில் இருப்பதாக தெரியவில்லை. எப்போது எல்லாம் ஆட்சியாளர்கள் விதிகளை மீறுகிறார்களோ மக்களை அல்லது பிரமணர்களை வதைக்கிறார்களோ அப்போது அவர்களை எதிர்ப்பவர்கள் அல்லது அழிப்பவர்களை பரசு ராமர்கள் என்று சொல்லி கொள்ளலாம். 


ஒருவேளை அவர் இப்போது இருந்திருந்தால் இன்றைய உலக ஆட்சியாளர்கள் அவரை தேடபடும் தீவிரவாதியாக கூட அறிவித்து இருக்கலாம்.


இதற்க்கு பின் வரும் ராமம், பலராமம், கிருஷ்ணம் மூன்றும் பிறப்பு, இறப்பு ,உணர்வு, சொந்தம் மற்றும் தேடல் என எல்லாம் கொண்ட மனிதர்களாவே அறிய படுகிறது. 


இன்னும் சொல்ல போனால் கடவுளின் குணம் மிக குறைந்து சராசரி மனித குணமே ஓங்கி உள்ளது.


அடுத்து, இவர்கள் உண்மையில் இருந்தார்களா? என்று என்னை கேட்டால் இவர்கள் உண்மையில் வாழ்திருக்க கூடும்.

ஏனெனில் வரலாற்றை அட்சரம் மாறாமல் சாட்சியுடன் எழுதி வைக்கும் மரபு மேற்கத்திய ஊடுருவல்லுக்கு பின்பு தான் நம் கலாசாரத்தில் நுழைந்தது. 


அதற்க்கு முன் இருந்த நமது பழக்கம் நாள், திதி, நட்சத்திரம் என குறித்து வைப்பது, செவி வழி புகழ் மற்றும் புகழ் பாடல்கள் என்ற வகையில் தான் இருந்துள்ளது மற்றும் இவர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் அத்தனை இடங்களும் இன்றும் உள்ளது. ஏன் அவர்கள் ஜாதகத்தை வைத்து இன்றும் ஜாதகம் பார்பவர்களும் இன்றும் உண்டு.


இவர்களை கடவுளர்கள் என்று பார்ப்பதை விட வரலாற்று நாயகர்கள் என்று பார்த்தால்தான் நமது தினசரி வாழ்க்கைக்கு வழி காட்டுவார்கள்.


கடைசியில் எடுக்க போகும் கல்கி, 

அது முதல் ஐந்து போல திருவிளையாடலாக இருக்கலாம் அல்லது நம்ம ஒபாமா, மோடி அல்லது ராகுல் ஏன் இதை படிக்கும் நீங்களா கூட இருக்கலாம் இல்லை இனி மேல் பிறக்கபோகும் மனிதர்களில் ஒருவராகூட இருக்கலாம் – ஒரே தகுதி இவ்வுலகை அழிக்க கூடியவராக இருக்க வேண்டும்.


கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் இன்றைய காலகட்டதில் கல்கியை வரைய சொன்னால் அவர் ஜீன்ஸ் பேண்ட் போட்டு ஜெர்க்கின் அணிந்து தோளில் ஒரு ராக்கெட் லாஞ்சர் சுமத்து பின் புறத்தில் ஒரு ராணுவ விமானம் முழுவதும் அணுகுண்டோ அல்லது அதை விட சக்தி நிறைந்த அழிவு பொருளுடன் இருக்கும் படி வரைந்திருப்பார்கள்.


இந்த மனநிலையில் இந்த லிங்கிற்கு சென்று ராமனின் வாழ்க்கை சுருக்கம் படியுங்கள் ராமர் தற்கொலை தான் செய்தார் என்று நம்புவீர்கள். 

                                                --- தொடரும்

Saturday, 19 October 2013

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் ?- ஒரு உளவியல் பார்வை



ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் ?- ஒரு உளவியல் பார்வை

ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும், சர்ச்சைகளும் பல நூறு ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ராமர் உண்மையில் வாழ்ந்தார் என்ற கோணத்தில் அவரின் இறுதி முடிவை ஏன் அப்படி எடுக்க வேண்டும்? என்ற ஒரு உளவியல் பார்வை மட்டுமே,.

ராமனின் குணாதிசியம் என்பது கவனிக்க பட வேண்டிய ஆராய பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

அப்பன் தன் சிற்றன்னைக்கு கொடுத்த வாக்கிற்கு உட்பட்டு அவனை பிரிந்து அவரின் இறப்பிற்கு தானே காரணம் ஆகிறான். சாபம், வரம் என்று காரணம் பல சொன்னாலும், "என் அம்மா இருக்க, நான் இருக்க உன் கடைசி மனைவியின் ஆசை உனக்கு பெரிதாக உள்ளதா? நீயும் வேண்டாம், உன்னால் வரும் அரசும் வேண்டாம்" என்ற உளவியலே இதற்க்கு காரணமாய் இருந்திருக்க வேண்டும்.

ராமனின் ஏக பத்தினி விரதம் என்பதும் அவன் அப்பாவினால் ஏற்பட்ட தாக்கமாய் தான் இருக்க வேண்டும். தன் தந்தை செய்த தவறை அதனால் குடும்பத்தில் ஏற்படுகின்ற குழப்பத்தை பார்த்து இந்த தவறை தானும் செய்யகூடாது என்ற உளவியலே இருந்திருக்க கூடும்.

சரி, காட்டில் மனைவி மற்றும் தம்பியுடன் இருக்கிறான். சூர்ப்பனகை வருகிறாள் தன் காதலை சொல்லுகிறாள். ராமன் இவள் காதலை ஏற்கவேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். இவன் நிராகரிக்கிறான். அத்துடன் என் தம்பியை கேட்டுப்பார் என்று சொல்லி அவளை அவனிடம் அனுப்பி வைக்கிறான். 

இது என்ன மனநிலை? உற்சாகத்தில் இருக்கும் மனிதர்கள் பலவீனமானவர்களை மாற்றி மாற்றி கோர்த்து விட்டு விளையாண்டு பார்க்கும் மனோபாவம்.

இங்கும் விளையாட்டு வினையானது. 

இங்கும் உளவியலை கவனிக்க வேண்டும் ராமனின் மனநிலையில் அவன் தம்பி இருக்கவில்லை.

ராமன் காட்டில் இருந்தாலும் அவன் மனைவியுடன் உள்ளான். ஆனால் லட்சுமணனோ மனைவியை பிரிந்து தனியே உள்ளதால் ஏற்பட்ட கோவேமே அவன் செய்கைக்கு காரணமாய் இருந்திருக்க வேண்டும்.இயலாமையின் வெளிப்பாடு அவன் காட்டிய வன்முறை.

                                                     -- தொடரும்

Friday, 18 October 2013

பெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம்.


பெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம்.




ஆம் 2050 -இல் உழைப்பதற்க்கு 320 கோடி கரங்கள் இருக்கும் .
சிந்திப்பதற்கு 160 கோடி மூளைகள் இருக்கும்.

 
உலகத்தின் மொத்த பொருளாதாரமே நம்மை நம்பி இருக்கும்.
160 கோடி பேருக்கு கண்டிப்பாக இந்த இடம் பத்தாது. 


ஆகவே தேவைக்கு உலகம் முழுவதும் பரவ வேண்டிய கட்டாயமும் அதற்க்கு வேண்டிய பலமும் பெற்றிருப்போம் ஒருவேளை உலகமே இந்தியாவிற்குள் அடங்கி இருக்கலாம் .

ஒரே ஒரு குறை 160 கோடியில் தமிழர்களின் 16 கோடி பேர் தமிழர்களாக இருப்பதே அரிது. அதற்க்கு நம்முடைய பிறப்பு விகிதம் குறைவாய் இருப்பதே காரணம்.


ஆகவே அனைவரும் விடாமல் முயற்சி செய்யுங்கள் 160 கோடியில் 40 கோடி நாமாக இருந்தால் தான் இந்தியாவை நமது கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முடியும். 


நமது பிறப்பு விகித முன்னேற்றேமே நமது முன்னேற்றம்.ஒவ்வொரு தம்பதியரும் குறைந்தது 5 குழந்தைகள் பெற்றால் தான் நாம் சாதிக்க முடியும்!!!!
 

Thursday, 17 October 2013

அவரும் உணர்வும் – எங்கள் அண்ணாச்சி



      அவரும் உணர்வும் – எங்கள் அண்ணாச்சி

கடந்த ஒரு வாரமாக மனதின் ஓரத்தில் அரித்து கொண்டிருந்த ஒரு நிகழ்வுக்கு இன்று மணி கட்டும் நாள்.

இன்று ஒரே ஆர்வமாகவும் மனிதர்களின் உணர்வுகளை ஆராயக்கூடிய மன நிலையில் நான் இருந்தேன். 

இதோ அந்த நிமிடம் ஆரம்பமானது, இதோ இந்த கூடம் முழுவதும் ஆட்கள் பல தர வயது பல தர பட்ட உணர்வை உடயவர்கள் பல தர பட்ட பணியில் இருப்பவர்கள் இவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரே நூலுக்கு கட்டுபட்டு கூடியிருந்தார்கள். 

அனைவர் முகத்திலேயும் ஒரு வித சோகம், ஒரு வித விரக்தி, பேசு பொருள் அனைவருக்கும் தெரிந்தது போல் தோன்றியது.

பொதுவாக இழவு வீட்டுக்கு கூடுகிற வீட்டில் கூட ஒரு வித சத்ததுடன் இருப்பது நமது கலாசாரம். ஏன் தேசிய கீதம் பாடும் போது கூட ஒரு சில சத்தங்கள் நமக்கு பழக்கம். எதுவும் இல்லாத ஒரு வித மயான அமைதி எனக்கு ஆச்சரியத்தை தந்தது.

சம்பிரதாயம் முடிந்து மணி கட்டுபவர்கள் மணியின் நிலமையையும் கயிற்றின் பலத்தையுமும் விளக்கி கொண்டிருந்தார்கள் கூடத்தில் எந்த வித ரியாக்சன் இல்லை. அமைதியாக இருந்தார்கள். 

எனக்கு விளக்கங்கள் காதில் விழவில்லை என் பார்வை கூடத்தில் இருபவர்கள் மேலே இருந்தது.

நான் எனக்குள் கரைந்தேன் ஏன் இந்த அமைதி எதற்க்கு பேசி தனக்கு தானே சூனியம் வைத்து கொள்ள வேண்டும் என்ற பயமா? 
இல்லை வீட்டுக்கு போனதும் "எப்பங்க பர்சசேஸ் போலாம்?" என கேட்கும் மனைவிக்கு  என்ன சொல்லுவது என்ற நினைப்போ! 
"அப்பா, எப்போ எனக்கு புதுடிரஸ்" என காலை கட்டும் குழந்தைகளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்ற யோசனையா? 
"அப்பா, எனக்கு என்ன கிஃப்டுப்பா" என கேடக போகும் வயது வந்த பிள்ளைகளிடம் என்ன சொல்வது என்ற தயக்கமா? 
இல்லை, இந்த வாழ்விற்கும் வசதிக்கும் இவர்கள் தானே காரணம் இதை ஏற்றுக்கொள்வோம் என்ற பெருந்தன்மையா!! 

காரணம் எதுவாகினும் பிசிறு தட்டுவது கூட்டத்தின் இயல்பு, இயல்பு மாறிய இந்த மௌனம் மனதை பிசைந்தது. இவர்களின் எதிர் காலத்தின் சூனியமே இந்த மௌனம் என்பது போல இருந்தது.

வெளிச்சமற்ற ஆழ்ந்த இருளின் நிசப்ததில் மெழுகுவர்திகள் இருளை ஏற்றி தன்னை கரைந்து கொண்டிருப்பது போல இருந்தது. 

விளக்கங்கள் முடிந்து கலையலாம் என சொல்லும் முன்பே கலைந்தனர்.

அங்கிருந்த தேநீரை கூட முக்கால்வாசி பேர் தொடவில்லை அப்போதும் ஒரு அமைதி  அனைவரும் அவரவர் கடமைக்கு திரும்பினர். 

விளக்கம் கொடுதவர்களின் முகத்தை பார்த்தேன் ஒரு வெற்றி பெருமிதம் எனக்கு புரியவில்லை எது வெற்றி?

காரணம் ஏதுவாக இருப்பினும் கனத்தை அமைதியாக சுமந்து சென்ற கூட்டம் எனக்கு தேவர்களாக தெரிந்தார்கள்.
.
என்னை அறியாமல் எனது கண்களில் கண்ணீர் வந்தது அது எனக்கும் சேர்த்துதான். 

என்று அவர் சொல்லி முடித்தவுடன் என் கண்களிலும் துளி கண்ணீர் அந்த மௌன கூட்டத்திற்கு.

பின் குறிப்பு:
எங்கள் அண்ணாச்சி அவருக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை கண்ணீருடன் சொல்லும் பொழுது அதிசியத்து போனேன். எல்லோரும் நான் நான் தமக்கு தமக்கு எனும் பொழுது, பிறருக்காக,- சம்பந்தமே படாத நண்பன் முன் தன் கூட்டத்திற்கே கண்ணீர் சிந்தி புலம்பிய பொழுது அவரின் மனிதம் மனதிற்குள் அவரை கை கூப்பி வணங்க வைத்தது. அவரின் அனுமதியன்றியே வலை ஏற்றுகிறேன். இப்பதிவு அவரின் மனிததிற்கு சமர்ப்பணம். .     

Thursday, 26 September 2013

சமையல் குறிப்பு 35.



              சமையல் குறிப்பு 35.  
  
1. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.



2. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.



3. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.





4. காய்கறிகளில் சில காய்கள் கசப்பு சுவையுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்



5. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.





6. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.



7. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.





8. தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.



9. காய்ந்து போன கறிவேப்பிலை, கொத்துமல்லி இலைகளை இட்லிச் சட்டி நீரில் போட்டு இட்லிவேக வைத்தால் இட்லி மணமாக இருக்கும்.





10. இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.



11. முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீ‌ஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.





12. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.



13. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.





14. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

 

15. காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.


  16. வாழைக்காய்,வாழைப்பூ,வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது          மிகுந்த மணத்துடன் இருக்கும்இரண்டு   தேக்கரண்டி தேங்காய்      
      எண்ணெய் விட்டு தாளித்தால், , மிகுந்த மணத்துடன் இருக்கும்

17. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.



18. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.



 19.உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.



 20.முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

 

 21.அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது.  இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.



 22.மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி சாதரண உப்பைச் சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.



 23.துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.





24.குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.



25. பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.





26. தர்பூஸ் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும்



27. கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.





 28.மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.



 29.வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.



 30. எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். 


31. பிரியாணி மற்றும் கலவை சாதங்களுக்கு அவசராமக பச்சடி செய்ய ஒரு பிடி மிக்ஸரை தயிரில் போட்டு கலக்கி துருவிய கேரட் சேர்த்து பறிமாறலாம்.

 32. பனீரை ஃபிரிஜில் வைத்தால், மஞ்சள் நிறமாகிவிடும்.  ஒரு வெள்ளைத்துணியில் வினிகர் கலந்த நீரை தெளித்து அதில் பனீரை வைத்து ஃபிரிஜில் வைத்தால் நிறம் மாறாது.


33. "கொள்ளு"வை வேக வைத்து வடித்த தண்ணீரைக் குடித்து வந்தால் சக்தியான உடம்பும் ஒல்லியான உடம்பும் உங்களுக்கே.



 34. பாதாம் பருப்பிற்கு பதில் வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது.  ஆனால் உடல் வலிமை பெறும்.

 35. வேப்பம்பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சூடான சாதத்தில் பிசைந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் நுழைவுத்தேர்வு, தேர்வு ஜுரம், கல்லூரி சேர்க்கை ஜுரம், நாளை பள்ளி திறக்கிறதே என்ற ஜுரம் எல்லாம் பறந்து போகும்

பின் குறிப்பு : அனைத்தும் தலைவி தான் கலந்து போகும் போட்டிக்கு படித்தது கேட்டது மற்றும் அனுபவத்தில் இருந்து எழுதியது.  

 - by PONNTHIRU