Powered By Blogger

Sunday, 29 December 2013

தமிழ் தெரியும் தமிழி தெரியுமா?



தமிழ் தெரியும் "தமிழி" தெரியுமா?


"தமிழி" என்றதும் ஏதோ "பிகர் மேட்டர்" என்று வந்தவர்களுக்கு ஸாரி இது பிகர் மேட்டர் இல்லை. அப்படி எதிர்பார்ப்புடன் வந்தவர்கள் அப்டியே நம்பள்கியை நாடவும். அவர் பக்கத்திற்கு செல்லும் வழி சைடில் உள்ளது கிளிக்கவும்.

வேதங்கள் நாலும் நமக்கு தெரியும் அது எழுத பட்ட மொழி இது வரைக்கும் சமஸ்கிருதம் (நன்றாக கட்டப்பட்டது) அப்படினு இது வரைக்கும் நாம நம்பிக்கிட்டிருக்கோம். ஆனா பாருங்க வேத ஆராய்சி பன்ற வேதஸ்ரீ நிறுவனரும் தலைவருமான பி வி என் மூர்த்தி சொல்றார் அவைகள் சமஸ்கிருததில் எழுத படவில்லை அவைகள் தமிழி என்ற மொழியில் எழுதபட்டுள்ளன என்கிறார்.

அது மட்டும் இல்லைங்க வேதத்தில் உள்ள பல வார்த்தைகள் சமஸ்கிருத அகராதியிலேயே இல்லையாம். அந்த காலகட்டதில் எழுதிய பல நூல்கள் தமிழி என்ற மொழியிலே தான் எழுதியிருக்க வேண்டும்னு அடித்து சொல்றாருங்க,..,

சரி சரி இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்னு கேக்குறீங்களா??.. நேற்று தினமணி வெப்சைட் மேயும் போது இந்த மேட்டர் கண்ணில் பட்டுச்சுங்க..இதை பற்றிய மேலதிக தகவலுக்கு இதை கிளிக் செய்யுங்கள்.  

Saturday, 28 December 2013

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 5

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 5

குறிப்பு : தொடர் வேலை காரணமாய் பதிவு தாமதமாய் ஆனதிற்கு மன்னிக்கவும். 

 

"சூழ்நிலை"- கடவுளாக மாற இளம் பருவத்தில் வந்த துக்கத்தினால் எழும் எழுச்சி கண்ணை மறைக்க ராமன் விட்ட அம்பு குறி தவறாமல் இலக்கை தாக்கியது. 

அம்பு பிளந்த பிளவில் இருந்து "தர்மம்" கொப்பளித்து கேள்வி கேட்க..., அதற்க்கு ராமன் சொன்ன பதில்கள் எல்லாம் சப்பைகட்டுதான்.. வன நரர்களை (காட்டில் வசிக்கும் மனிதர்கள்) வானரங்கள் (குரங்குகள்) என ஆக்கியதுதான் மிச்சம், மனம் இருக்கும் மனிதர்கள் எல்லோருக்கும் இம் மாதிரி நிக்ழ்வுகள் "வடுக்கள்" தான். ராமனுக்கும் இது பொருந்தும்.

பலத்தை காட்டிய பலவான் பின்னே படைகள் சேர்வது இயல்புதானே! ராமனுக்கும் அது நடந்தது. படைகள் சேர, சேர அது அவனை இன்னும் பலவானக மாற்றியது அவனால் மிக பெரிய சேனையை கட்ட முடிந்தது. எட்டு திக்கும் ஆளை அனுப்பி அவன் மனைவியை தேட முடிந்தது.

ஒரு நிமிடம் படிப்பதை நிறுத்தி கற்பனை செய்து பாருங்கள், நீங்களும் உங்கள் சகோதரரும் உங்களுக்கு சகோதரர் இல்லையென்றால் உங்கள் நண்பரும் ஒரு திக்கு தெரியாத காட்டில் ஒரு பெருத்த அவமானத்துடன் கைவிட பட்ட நிலையில் சிக்கி உங்கள் உங்களால் மட்டும் முயற்சித்து ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதில் ஒரு சந்தர்பம் உருவாக்கி அதில் சாமர்த்தியமாக வெற்றி பெற்று அதன் மூலமாக உங்களுக்கு பல நூறு மனிதர்கள் கட்டு பட்டு அவர்கள் உங்களை ஒரு அரசன் அளவிர்க்கு நடத்துவார்கள் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

துக்கம் மறந்து கர்வமும் பெருமையும் மனதில் ஏற வேண்டும். ஏறினால் தான் "மனிதன்", அத்துடன் ஒன்றை நினைவு படுத்தி கொள்ளுங்கள். அது குருதிபுனலில் வரும் வசனம் "வீரம் என்பது பயம் இல்லாத மாதிரி நடிப்பது" இதை இப்படியும் சொல்லலாம் "உச்ச கட்ட பயம் கவ்வும் போது தான் வீரமே பிறக்கிறது" பிறகு, அதுவே "போதை" ஆகி போகிறது. 

இங்கும் அது தான் உங்களுக்கும் நடக்கும். கர்வம் உச்சதிற்கு போகும் போது மனம் கர்வமே இல்லாத மாதிரி நடிக்க சொல்லும் அதன் வெளிப்பாடு அன்பாய் பொங்கும் பிறகு அதுவே உலகின் உச்சிக்கு உங்களை தூக்கி விடும். 

அனைவரும் உங்களை "நல்லவர்", "வல்லவர்" என்று சொல்ல வேண்டும் என ஏங்க வைக்கும் இந்த நல்லவர், வல்லவர் என்ற வார்த்தைகளுக்காக நீங்களும் எதை வேண்டுமானாலும் இழப்பீர்கள்.

என்ன கற்பனை பயமுறுத்துகிறதா? ஆனால் இது நிஜம்! மனம் விட்டு உங்கள் மனதிடம் கேட்டு பாருங்கள் அது உண்மையை சொல்லும்.

ராமனுக்கும் அன்பு பொங்கியது பாற்கடலாய்.. அந்த அன்பில் மூழ்காதவர்கள் தான் யார்?


மூழ்கியவர்கள் அனைவரும் "முத்து" எடுத்தார்கள் ஏன் இன்னும் முத்து எடுக்கிறார்கள்.(என்னையும் சேர்த்துதான்). 


நம்ம அனுமனுக்கோ "முத்து மலையே" கிடைத்தது.


நல்ல வளமான மண்ணும் நீரும் ஓளியும் ஊக்கமாய் வீரியமான 
'சிறு கடுகு"க்கு கிடைத்தால் அது உருவாக்கும் தண்டும் இலையும் எவ்வளவு பெரியது, கடுகு செடியை பார்த்தவர்களுக்கு தெரியும் கடுகின் விஸ்வரூபம் எவ்வளவு பெரியது என்பது.

இங்கு "வீரிய வித்து" அனுமனுக்கு ராமனின் அன்பு என்கிற ஊக்கம் அவனை விஸ்வரூபம் எடுக்க வைத்தது. அந்த விஸ்வரூபம் அவனையே ஆச்சர்ய பட வைத்தது எல்லாமே ராமன் என அவன் மனம் நம்பியது இந்த எண்ணம் அவனை ராமனிடம் சரணடைய வைத்தது.

அனுமனை பார்க்கும் பொழுது எல்லாம் தன் அன்பின் பலம் ராமனுக்கும் சந்தோஷத்தை கொடுத்திருக்கும். கூடவே என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கும்...,          
                                                   -- தொடரும் 

Friday, 8 November 2013

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4



ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4


"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் .. அவன்...,"  என்று கண்ணதாசன் பாட போகிறதை அறிந்தோ என்னவோ, கடவுள் மனிதனாய் பிறந்து, அவனின் வாழ்க்கையை அனுபவித்து அதன் போக்கில் வரும் "ஏற்றத்தாழ்வுகளை" தான் கண்ட, கேட்ட, உணர்ந்த அனுபவத்தை வைத்து எதிர் கொள்ளும் சாதாரண மனிதனாகவே ராமன் வாழ்ந்துள்ளான்.

பொதுவாக ஓரு ஆணுக்கு, பெண்ணின் பால் இருக்கும் ஆர்வமானது அதீதம். சம வயது பெண்களிடம் அவர்களின் "பார்வை" தன் பால் ஈர்க்க கூச்சம், கோவம், அதிகாரம், அலட்டல், கெஞ்சல், கொஞ்சல் மற்றும் அன்பு என முயற்சி செய்யும் ஆண் ஒரு முதியவளிடம் நடந்து கொள்ளும் விதமே "அலாதி"யானது. 

சிறுவர்களுக்கு "முதியவள்கள்" ஒரு விளையாட்டு பொருள்! இங்கு வாலிப வயதினர்கோ அவர்கள் அன்பு சுரங்கம்!! முதிந்தவர்களுக்கோ அவர்களே எஜமானி!!! 

சிறு வயதில் கூனியிடம் விளையாண்ட ராமன், சபரி என்ற முதியவளை பார்த்தவுடன்..,  மனைவியை பறிகொடுத்த அவமானம் பொங்க, கூனியிடம் விளையாண்ட விளையாட்டு உறுத்த, சபரியின் அன்பில் கரைகிறான் ராமன்.

இஃது இயல்பு தானே. அது மட்டுமல்ல, அவள் ஆணைக்கு இணங்க, மதங்க மலைநோக்கி பயணிக்கிறான். அங்கு யாரிடம் "நட்பு" வைக்க வேண்டும் என்பது வரை ராமனுக்கு சபரி சொல்லி அனுப்புகிறாள். 

இங்க ஒரு விசயத்தை கவனியுங்கள், சிறு வயதில் ஒரு பெண்ணின் வெறுப்பை சம்பாதித்து.., வாலிப வயதில் தன் புஜபலத்தை நிரூபித்து அதனால் ஒரு பெண் சம்பாதித்து.., அப்ப பார்த்து ஒரு பெண் வரம் பெற.., சம்பாதித்த பெண்ணையும் அழைத்து காட்டுக்கு வந்து அங்கு ஒரு பெண் இவன் சம்மதம் கேட்க இவன் மறுக்க அவள் கோவம் இவன் சம்பாதித்த பெண்ணை புடுங்கி செல்ல.., அவளை மீண்டும் கைப்பற்ற ஒரு பெண் வழி சொல்லுகிறாள்.- "என்ன கொடுமை சரவணா..."

ஆனால் உண்மையில் தொன்னூற்றி ஐந்து சதவீத ஆண்கள் இன்றும் இப்படிதான், நாளையும் இப்படிதான், "உணர்வான பெண்கள்" கை காட்டும் திசையிலே ஆண்களின் ஓட்டம் இருக்கும். இது தான் சராசரியான மனநிலையும் கூட., இது நம்ம ஊரு "குப்பன்", "சுப்பன்" முதல் அங்கிட்டு "பில் கிளிண்டன்"' "ஒபாமா" வரை ஒண்ணுதான். 

"சுக்ரீவன்", "அனுமன்: இவர்களிடம் ராமன் பழகிய விதமும் பெற்ற மற்றும் செய்த உதவிகளும் இன்றும் ஆண் நண்பர்களுக்குள் நடக்கும் "மனோபாவம்" தான், கூட்டணி அமைத்தல், உசுபேத்தி பலம் கொள்ள வைத்தல், ஸ்கெட்ச் போட்டு பொது எதிரியை அழித்தல், கொண்டாடுதல், கொண்டாடுவதை ரசித்தல் என்ற முறையில் தான் போகிறது. 

ராமன் வாலியுடன் நட்பு வைத்திருந்தால் அவன் பட்ட அவமானத்தை ஓரிரு நாட்களிலே துடைத்திருக்க முடியும்,. ஆனால். "வாலி "பலசாலி" உன்னால் அவனிடம் நேரடியாக மோதி வெல்ல முடியாது" என்று சுக்ரீவன் சொன்னதை ராமன் நம்பினான்., இன்னும் சொல்ல போனால் சுக்ரீவனின் ஆதரவும், நட்பும், அவன் நிலமையும் மற்றும் இருப்பும் அவனை நம்ப வைத்தது. இங்கு ஒருவேளை "விபீஷ்ணன்" போல ராமன் "மெய்பொருள்" அறிந்து சுக்ரீவனை வாலியிடம் காட்டி கொடுத்து வாலியிடம் சேர்ந்திருந்தால்.., ராவணன் தானே வந்து சீதையை ராமனிடம் ஒப்படைத்திருக்கலாம்.

பொதுவாக, ஆண்களுக்கு "தான்" என்ற இறுமாப்பு இருக்கும் தன்னை விட பலத்திலும் பொருளிலும் பெரியவர்களை பார்க்கும் போது ஒரு வித தாழ்ச்சியுடன் ஒதுங்கி போவதும், காழ்ப்புணர்வுடன் பார்பதும் சான்ஸ் கிடைத்தால் அவர்களை வெல்ல நினைப்பதும் இயல்பு.

இது ராமனுக்கு வேலை செய்திருக்க வேண்டும். "அவன் என்ன பெரிய "அப்பா டக்கர்" நேரடியாக வெல்ல முடியவில்லை என்றால் என்ன? என் மூளை பலத்தில் வெல்வேன், நான் யார் தெரியுமா? சிவ தனுசையே உடைத்தவானாக்கும்" என்ற கர்வமும், சுக்ரீவன் குழுவினர் தன் தலைமையை ஏற்க வைக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் ராமனை இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க வைத்திருக்க வேண்டும்.

                                                          - தொடரும்