Powered By Blogger

Thursday, 26 September 2013

சமையல் குறிப்பு 35.



              சமையல் குறிப்பு 35.  
  
1. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.



2. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.



3. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.





4. காய்கறிகளில் சில காய்கள் கசப்பு சுவையுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்



5. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.





6. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.



7. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.





8. தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.



9. காய்ந்து போன கறிவேப்பிலை, கொத்துமல்லி இலைகளை இட்லிச் சட்டி நீரில் போட்டு இட்லிவேக வைத்தால் இட்லி மணமாக இருக்கும்.





10. இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.



11. முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீ‌ஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.





12. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.



13. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.





14. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

 

15. காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.


  16. வாழைக்காய்,வாழைப்பூ,வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது          மிகுந்த மணத்துடன் இருக்கும்இரண்டு   தேக்கரண்டி தேங்காய்      
      எண்ணெய் விட்டு தாளித்தால், , மிகுந்த மணத்துடன் இருக்கும்

17. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.



18. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.



 19.உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.



 20.முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

 

 21.அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது.  இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.



 22.மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி சாதரண உப்பைச் சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.



 23.துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.





24.குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.



25. பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.





26. தர்பூஸ் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும்



27. கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.





 28.மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.



 29.வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.



 30. எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். 


31. பிரியாணி மற்றும் கலவை சாதங்களுக்கு அவசராமக பச்சடி செய்ய ஒரு பிடி மிக்ஸரை தயிரில் போட்டு கலக்கி துருவிய கேரட் சேர்த்து பறிமாறலாம்.

 32. பனீரை ஃபிரிஜில் வைத்தால், மஞ்சள் நிறமாகிவிடும்.  ஒரு வெள்ளைத்துணியில் வினிகர் கலந்த நீரை தெளித்து அதில் பனீரை வைத்து ஃபிரிஜில் வைத்தால் நிறம் மாறாது.


33. "கொள்ளு"வை வேக வைத்து வடித்த தண்ணீரைக் குடித்து வந்தால் சக்தியான உடம்பும் ஒல்லியான உடம்பும் உங்களுக்கே.



 34. பாதாம் பருப்பிற்கு பதில் வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது.  ஆனால் உடல் வலிமை பெறும்.

 35. வேப்பம்பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சூடான சாதத்தில் பிசைந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் நுழைவுத்தேர்வு, தேர்வு ஜுரம், கல்லூரி சேர்க்கை ஜுரம், நாளை பள்ளி திறக்கிறதே என்ற ஜுரம் எல்லாம் பறந்து போகும்

பின் குறிப்பு : அனைத்தும் தலைவி தான் கலந்து போகும் போட்டிக்கு படித்தது கேட்டது மற்றும் அனுபவத்தில் இருந்து எழுதியது.  

 - by PONNTHIRU