Saturday, 4 January 2014

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 6ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 6


ராமனுக்கான அனுமனின் "தேடல்" சீதையை பார்த்தவுடன் முடிவுக்கு வருகிறது.

சீதையை ராமனின் மறு வடிவமாகவே அனுமன் பார்த்திருக்க வேண்டும். அவளை கையோடு அழைத்து சென்று ராமனிடம் அன்பின் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்று அனுமனின் மனம் துடித்திருக்க வேண்டும்.  
                 
ஆனால், சீதையின் நிலையோ.., தூக்கிட்டு வந்தும் பலவந்த படுத்தாமல், பல நாட்களாக அவளின் சம்மததிற்கு காத்திருக்கும் அந்நாட்டு "அரசன்", அத்தனை வசதிகள் செய்து கொடுத்து அவளின் அன்பிற்கு ஏங்கி கிடக்கிறான். அவள் அனுமதியில்லாமல் அவளை தொடுவதில்லை என்று விரதமிருக்கிறான்.

அந்தப்பக்கம், அவள் காதலித்து கைபிடித்த கணவனின் நிலைமை தெரியவில்லை, கணவன் இவளை தேடுகிறானோ!, அல்லது ஏதாவது வனவிலங்கு அதன் பசிக்கு அவளை தூக்கி கொண்டு போயிருக்கலாம் என எண்ணி மனம் பேதலித்து அலைகிறானோ!!, அல்லது இவளை கண்டு பிடிக்க தீவிர முயற்சியில் இருக்கிறானோ!!! என்ற குழப்பம் எல்லாம் அவளுக்கு இல்லை. 

பொதுவான பெண்களின் பிடிவாத குணம் போல் அவன் வருவான், இவனை வெல்வான், என்னை மீட்பான்,. என நம்பிக்கையுடன் அவள் வாழ்ந்தாள். அவள் அவன் கணவனின் மீது வைத்த "நம்பிக்கை" இப்போது மெய்யானது.

கணவனின் தூதுவன் அவள் முன்னாள் நிற்கிறான் பெண்களுக்கே உரிய "கூரிய அறிவு" அவளுக்கும் வேலை செய்து இருக்க வேண்டும். தூதுவனின் "பலமும்" அவன் "எண்ணமும்" புரிந்ததால், "உன் கூடவே நான் கிளம்பி வந்தால் அது என் கணவனுக்கு இழுக்கு" என்று சொல்லியிருக்க வேண்டும் அது மட்டு அல்ல, இதில் இன்னும்  ஒன்றும்  உள்ளது அது "போ, போய் ராமனை வர சொல் "நான்" இங்கு தான் இருக்கிறேன், என்னை "தூக்கி வந்தவனும்" இங்கு தான் இருக்கிறான், அவனை வென்று என்னை மீட்க சொல்" என்ற "ஆணை" தான் அது.

ராமனுக்கு அவள் மனைவி இருக்கும் இடம் "அனுமானால்" தெரிந்தது ராமனுக்கு ஏற்கனவே தான் உருவாக்கின சேனையாலும் அது தரும் வெற்றியாலும், அவனுக்கு "உச்சகட்ட வெற்றி மனநிலை" வேலை செய்திருக்க வேண்டும்..அந்த மனநிலையில் அவனுக்கு "கடல்" கூட பெரியதாக தோன்றியிருக்க முடியாது. ஆகவே கடலில் பாலம் அமைப்போம் என்று தோன்றியிருக்க வேண்டும்.

சாதாரணமான மன நிலையில் "சாதகம், பாதகம்" பார்த்தால் யாருக்கும் இப்படி தோன வாய்ப்பில்லை, ஆனால் ராமனின் நிலையில் அவனுக்கு அப்படி தோனியது "எதார்த்தம்தான்". பிரமிக்க தக்க இந்த முயற்சிக்கு அவன் கூட இருந்த அனைவரும் அவனுக்கு ஒத்துழைத்தது, அவன் மீது இருந்த "அன்பு" தான் காரணமாக இருக்க வேண்டும் கூடவே அனைத்தும் ராமனால் முடியும் என்ற நினைப்பும் காரணமாய் இருந்திருக்கலாம்.

இங்கு ஆழமாய் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. அது, ஒரு அணிலும் கல்லை கொண்டு வந்து ராமன் பாலம் கட்ட கொடுத்தது, அதை பார்த்து மகிழ்ந்த ராமன் அதன் முதுகை தடவி கொடுத்தான். அப்போது ராமனின் விரல்கள் அணிலின் முதுகில் மூன்று கோடுகளாக பதிந்தது, அது இன்று வரைக்கும் அணிலின் முதுகில் உள்ளது. என்று ஒரு கதையும் உண்டு.   

இது முழுக்க முழுக்க புனைய பட்ட ஒன்றகாதான் இருக்கவேண்டும். ஆனால், இதை கொஞ்சம் "யோசியுங்கள்" அணில் ஒரு கல்லை எடுத்து வந்தால் அது எவ்வளவு பெரிதாக இருக்கும்?, அந்த கல் பாலம் கட்ட எந்த விதத்தில் உதவும்?, மொத்தமாகவே இது "வெட்டி வேலை", அப்புறம் எதுக்கு இந்த கதையை இங்கு புனைய வேண்டும்? எதற்காக என்றால் ராமனின் அப்போதைய மனநிலையில் அவனிடம் யார் வந்தாலும் அது வெட்டியாகவோ அல்லது தலை போகும் காரியாமாக இருந்தாலும் தன் "அன்பை" அவர்கள் மீது பொழிந்து இருந்திருக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் "அன்பு" என்ற பலமான கூர்மையான ஆயுதத்தை ராமன் கண்ணை மூடி கொண்டு அவன் தீவிரமாக மற்றவர்கள் மீது உபயோக படுத்தி இருக்க வேண்டும்.

இன்று பல "குடும்பங்கள்" மற்றும் "கார்பரேட் நிறுவனங்கள்" முன்னேறாமலும் காணாமல் போவதற்க்கும் ராமனின் “ஒரு வெற்றி அதை தொடர்ந்து அன்பு” என்ற இந்த வித்தை தெரியாமல் போனதே காரணம். "குடும்பத்திற்கு பின்னே பணம் மற்றும் சுகம்” என்ற குடும்பங்களும், “தொழிலாளர்களுக்கு பின்னே கஸ்டமர்” என்ற நிறுவனங்களும் இது வரை தோற்றது இல்லை.

சற்று கண்ணை மூடி உங்களுக்கு தெரிந்த குடும்பங்களையும், நிறுவனங்களையும் நினைத்து பாருங்கள் உண்மை புரியும்.    

-- தொடரும் 

   

3 comments:

 1. இது தவறான புரிதல், சூரியன் கிழக்கே உதிப்பதால் பிறந்ததாகவும் அர்த்தமில்லை, மேற்கில் மறைவதால், செத்ததாகவும் அர்த்தமில்லை. இந்த மாதிரி புரளிகளை, அவதூறுகளை எழுதாமலிருப்பது உத்தமம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜெயதேவ், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!,

   எது புரளி “ராமன் தற்கொலை செய்து கொண்டான் என்பதா?”, எது அவதூறு? “ராமன் என்பவன் “அன்பே” உருவானவன் என்று நான் சொல்லுவதா?” முதலில் போய் ராமாயணத்தை கடைசி வரி வரை படித்து விட்டு வாருங்கள், ராமன் எப்படி மாண்டான் என்பது தெரியும். அது முடியவில்லை, நான் என்ன சொல்லி வருகிறேன் என்பதையாவது அனைத்து பாகங்களிலும் படித்து விட்டு கருத்து எழுதுங்கள். முதலில் இறைவனை “அனுபவித்து” பழகுங்கள்!! அவசரமும், கோவமும் வராது!!!

   Delete
 2. தொடருங்கள் தொடர்கின்றேன் ஐயா!

  ReplyDelete