சீத்தாவை தேடி .... ! அவன் ...!
(ஒரு கதை இருவரின் நடையில் .., பிடித்த நடையின் சொந்தகாரரை பின்னூட்டதில் பாரட்டவும்..,)
"காலை
கதிரவன்" கண்சிமிட்டும் முன் எழுந்து, காலை கடன் முடிந்து வேகமாக பள்ளிக்குச் செல்ல ஆயத்தமானன், "காளை", பத்தாம்
வகுப்பு படிக்கும் பள்ளி பாலகன்,
அம்மா சாப்பாடு ரெடியா? என்னடா,என்ன அவசரம்?,
இன்றைக்கு சீக்கிரம் கிளம்புற? என்றாள் அம்மா,
எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குமா, தோசையை சீக்கிரம்
கொடு, இருடா தேங்காய் சட்டினி ரெடி பண்ணிவிட்டு தோசை
ஊற்றுகிறேன், வேண்டாம் அம்மா நேராமாயிற்று நேற்று வைத்த பழைய
குழம்பை கொடும்மா ...,
என்ன படிப்போ!! போ, நாங்கெல்லாம்
படிக்கும் போது "10 மணிக்குத்தான்" ஸ்கூலுக்கு போவோம், என்ன
ஸ்கூலோ என்ன படிப்போ? என்று முணங்கியவாறு தோசை வார்க்கச் சென்றாள்..,
காளையின் மனம்
சீத்தாவின் நினைப்பில் மூழ்கியது,.., காளையும், கந்தனும் ஒரே பள்ளியில் பயிலும்
தோழர்கள், இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் செல்வது வழக்கம்..
அந்த ஊரில் இருக்கும் பெரிய வீட்டின் அருகில் இருக்கும் பஸ் ஸ்டாபில் இருந்து பேருந்து மூலம் பக்கத்து ஊர் பள்ளிக்கு செல்வது வழக்கம், சில நாட்களுக்கு முன்பு , காளை சீத்தாவை ஓரக் கண்ணால் கண்டான்,..., மனம் இறக்கை கட்டி பறந்தது, இலைமறைக் காயாக "சீத்தா" இருக்க , சாலை ஓரத்தில், "நான் இருக்க படைத்தன் பயனை அடைந்தான் இறைவன்", என புதுக்கவிதை புனைந்தது,
காளையின் மனம் நாட்கள் நகர்ந்தது, காலம் கணிந்தது, சீத்தாவை தாமதக்கும் எண்ணம் பிறந்தது..,
இந்தா தோசை என்றாள் அம்மா நினைவு களைந்தது, வேகமாக சென்று விட்டு கந்தனுக்கு முன் சென்று சீத்தாவை காணவேண்டும் என்று எண்ணி வேகமாக சாப்பிட்டு முடித்தான் காளை, அம்மா... பாய்! என்று சொல்லியவாறு வேகமாக நடந்தான்.
வழியில் உள்ள மாரியம்மன் கோவிலில் எனக்கு சீத்தா கிடைக்க வேண்டும் என்று வேண்டியவாறு ஓட்டமும் நடையுமாக.., முன்னே சென்ற "மாட்டையும், மாட்டுக்கார வேலணையும்" முந்தியவாறு சென்றான், மெயின் ரோடை அருகில் உள்ள நாயர் டீ ஸ்டாலில் "ஆவதும் பெண்ணால மனிதன் அழிவவதும் பெண்ணால...!" என்ற பாடல் முணு முணுத்து கொண்டிருந்தது..,
எதையும் காதில் வாங்கதவானக வேக நடை போட்டு பெரிய வீட்டின் முன் நின்றான், அக்கம் பக்கம் பார்த்தான் மாட்டுக்கார வேலன், வண்டி மாட்டை கையில் பிடித்து வருவது தெரிந்தது,
அதை பார்த்தவுடன் அவர் வருவதற்குள் நினத்ததை முடிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் "புத்கக பையை" வராவதியில் வைத்து விட்டு, வேகமாய் முன்னேறி அந்த வீட்டின் கேட்டை தாண்டி, கையை தூக்கி ஒரு குதி குதித்து சீத்தாவை தொட்டான்.

குதிக்கும்
பொது மேலே போன கால்கள் கீழே வரும் போது “பின்ன” அந்த தார் சாலையில் குப்புற
விழுந்தான். மாடு பிடித்து வந்தவர் “டே, டே காளை.. என்ன ஆச்சு?” என்றவாறே ஓடி வந்து அவனை
தூக்கி நிறுத்தினார் கீழே விழுந்ததில் “சிராய்ந்த முழங்கையும்” அதில் “வேர்க்கும்
இரத்ததை”, அழுகை பொங்கும் கண்களுடன் பார்த்த “அவன்” மீண்டும்
சீத்தாவின் நினைப்பு வர அந்த சீத்தா மரத்தை நிமிர்ந்து பார்த்தான் இவன் கைபட்ட
வேகத்தில் அந்த சீத்தா பழம் இவன் அருகே கால்வாயில் விழுந்து கிடந்தது.
-------ஆக்கம் - கோமதி
சீத்தாவை தேடி .... ! அவன் ...!
அடுப்பு
புகை இடம் முழுவதும் பரவி இருந்தது, “அம்மா, என்ன அம்மா?” என்றான்
அவன், “நான் என்ன செய்ய? நீ வாங்கி
வந்த விறகுதான் பாதி பட்சையா இருக்கு, ஊதி ஊதி மூட்சே
முட்டுது, போய் அந்த தட்டிய நல்லா உள்ளே தள்ளி செங்கல்
முட்டுகொடு, அப்படியே வெளியே போய் உட்காரு..,” என்றாள் கம்மியும் இருமியும் கண்களை தொடைத்தவாறு அவள் அம்மா.
கண்ணை
கசக்கிய படியே, கொடியில் தொங்கிய பேண்டை எடுத்து அதற்க்குள் காலை சொருகி, சட்டயை எடுத்து உதறி உடலில் போர்த்தி பொத்தானை போட்டு, சிதறி கிடந்த புத்தகங்களையும் நோட்டையும் கவரில் போட்டு, கையில் பிடித்து, பேனாவை எடுத்து சட்டையில் சொருகி, தட்டியை இழுத்து கிடைத்த இடைவெளியில் நுழைந்து வெளியே வந்து சைடில்
இருந்த அம்மி கல்லின் மீது கவரை வைத்து, உடன் திரும்பி
குனிந்து செங்கல்லை எடுத்து தட்டியை உள்பக்கம் தள்ளி முட்டு கொடுத்தான்.பின்னர்
அந்த அம்மி கல்லின் மேல் ஓர் ஓரமாய் அமர்ந்தான்.
கீ
...கீ .. சத்தம் வந்த திசையை பார்த்தான், எதிரே இருந்த புளிய மரத்தின் பொந்தில் இருந்து வளைந்த சிவப்பு மூக்கை
நீட்டிய படி அந்த பொந்து கிளி அமர்ந்திருந்தது அதையே பார்த்தான், அவன் மனம் வேகமாக யோசித்தது இன்று எப்படியாவது அந்த மாடிவீட்டு “சீத்தாவை”
அடைந்து விட வேண்டும்.
இன்று
உடன் வரும் கந்தன் யாரோ அவன் சொந்த காரங்க அழகர் கோவில்லே கடா வெட்டு வச்சு
இருக்கங்கலாம் அதுக்கு அவன் குடும்பத்தோட போறானம்.. என்னை லீவு சொல்ல
சொல்லிட்டான். இது தான் சான்ஸ் என்று அவன் நினைக்கும் போதே, அவன் அம்மாவின் குரல்
அவன் காதில் கேட்டது “ஏண்டா எளந்தாரி பய!.. உனக்கு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்
அம்மி மேல உட்காரதே, உட்காரதேனுட்டு.. ஆகாதுடா போய் அந்த
கட்டில்ல உட்காரு”, என்றாள்.
அவன்
எழுந்து கயித்து கட்டிலில் உட்கார்ந்தான் இவன் எழுந்து போகும் போதே அந்த கிளி “கீ”
என்று கத்தி விருட் என்று பறந்து சென்றது. அம்மா அவனிடம் தோசை நிரம்பிய அலுமினிய
தட்டை நீட்டினாள் கையில் வாங்கிய அவன், “என்னம்மா நேத்து வச்ச குலம்பு தானா என்றான்”, “ம்..
இப்ப இருக்குறே வேலையிலே, எங்க கல்லை வைத்து தேங்கா
அரைக்கிறது இருக்கிறதே சாப்பிட்டு கிளம்பு, “காளை” நேரமாச்சு”, என்றாள்.
அம்மாவை
முறைத்த படியே தோசையை சாப்பிட ஆரம்பித்தான் மீண்டும் மனதிற்குள் சீத்தாவின்
நினைப்பு வந்தது. சில நாட்களாக இவனும் கந்தனும் போகும் போதும் இவன் மட்டும் அவனுக்கு
தெரியாமல் அந்த மாடி வீட்டு சீத்தாவை
பார்த்து கரெக்ட் பண்ணி வைத்திருந்தான். போகும் போதும் வரும் போதும் இவன் கண்கள்
சீத்தாவின் மீதே இருந்தது.
வேக
வேகமாக சாப்பிட்டு கட்டிலுக்கு அடியில் தட்டை வைத்து விட்டு, எழுந்து, இரண்டு எட்டு வைத்து அருகில் உள்ள தொட்டியில் கையை முக்கினான். அவன்
அம்மா அதை பார்த்து “டேய், டேய்” என கத்தும் போதே முக்கிய
கையை பேன்ட் பாக்கெட் உள்ளே செருகி ஒரு துடை துடைத்து, புத்தக
கவரை எடுத்து மார்பில் அனைத்து, “வர்ரேம்மா” என்று குரல்
கொடுத்து வேகமாய் நடந்தான்.
வரப்பில்
நடந்து சரளை சாலையை அடையும் போது மனம் படபடவென அடித்தது, “கரும்பாயி அம்மா
இன்னும் சீத்தா அங்கு இருக்கணும்”, என்று வேண்டி கொண்டான்.
சரளை சாலை முடிந்து முட்டிய ரேழி வாரவதியும் உடன் தார் சாலையும் வந்தது. தார்
சாலையில் திரும்பி உடன் அவன் பார்வை மாடி வீட்டை பார்த்தது,
அவன் கண்கள் சீத்தாவை தேடியது... தேடிய கண்களில் சிக்கிய சீத்தாவின் உருவத்தில்
அவன் மனம் மயங்கியது
அவ்வளவுதான்
அக்கம் பக்கம் பார்த்தான் ஒருவர் வண்டி மாட்டை கையில் பிடித்து வருவது தெரிந்தது, அதை பார்த்தவுடன் அவர்
வருவதற்குள் நினத்ததை முடிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் புத்கக பையை வராவதியில்
வைத்து விட்டு, வேகமாய் முன்னேறி அந்த வீட்டின் கேட்டை
தாண்டி, கையை தூக்கி ஒரு குதி குதித்து சீத்தாவை தொட்டான்.
குதிக்கும்
பொது மேலே போன கால்கள் கீழே வரும் போது “பின்ன” அந்த தார் சாலையில் குப்புற
விழுந்தான். மாடு பிடித்து வந்தவர் “டே, டே காளை.. என்ன ஆச்சு?” என்றவாறே ஓடி வந்து அவனை
தூக்கி நிறுத்தினார் கீழே விழுந்ததில் “சிராய்ந்த முழங்கையும்” அதில் “வேர்க்கும்
இரத்ததை”, அழுகை பொங்கும் கண்களுடன் பார்த்த “அவன்” மீண்டும்
சீத்தாவின் நினைப்பு வர அந்த சீத்தா மரத்தை நிமிர்ந்து பார்த்தான் இவன் கைபட்ட
வேகத்தில் அந்த சீத்தா பழம் இவன் அருகே ரேழியில் விழுந்து கிடந்தது.
----ஆக்கம்--V P திரு
பின் குறிப்பு: சில வேலைகள் காரணமாய் தொடர் இன்னும் ஓரிரு நாட்களில் ..,
இரண்டுமே அருமை... வாழ்த்துக்கள் 2...
ReplyDeletegood
ReplyDelete