ராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்
ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2
ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை – என்ற இடுகையில் தேனி
அவர்கள் கேட்டதன் விளக்கம்.
விளக்கத்திற்கு
முன்பு சில புரிதல்கள் வேண்டும்.
விஷ்ணு எடுத்தாக கூறப்படும் தசாவதாரங்களில் முதல்
ஐந்தும் அதாவது மட்ச, கூர்ம,
வாரக, நரசிம்ம மற்றும் வாமனம் ஆகியவைகள் இறைவன் இறைவனாகவே
இருப்பார், அந்த சில கணங்கள் மட்டும் அந்த வடிவமாக காட்சி தந்து காரியம்
சாதிப்பார். ஆனால் குணம் என்பது மாறாமல் இறைவனாகவே இருக்கும். அதாவது சிவனின்
திருவிளயாடால் போன்று எடுத்து கொள்ளலாம்.
பரசுராமம்
என்பது பிறப்பு இருக்கிறது. ஆனால் எல்லா யுகத்திலும் அவர் வந்து போகிறார். அவரின்
முடிவு என்பது எனக்கு தெரிந்தவரையில் இருப்பதாக தெரியவில்லை. எப்போது எல்லாம்
ஆட்சியாளர்கள் விதிகளை மீறுகிறார்களோ மக்களை அல்லது பிரமணர்களை வதைக்கிறார்களோ
அப்போது அவர்களை எதிர்ப்பவர்கள் அல்லது அழிப்பவர்களை பரசு ராமர்கள் என்று சொல்லி
கொள்ளலாம்.
ஒருவேளை
அவர் இப்போது இருந்திருந்தால் இன்றைய உலக ஆட்சியாளர்கள் அவரை தேடபடும்
தீவிரவாதியாக கூட அறிவித்து இருக்கலாம்.
இதற்க்கு
பின் வரும் ராமம், பலராமம், கிருஷ்ணம் மூன்றும் பிறப்பு, இறப்பு ,உணர்வு,
சொந்தம் மற்றும் தேடல் என எல்லாம் கொண்ட மனிதர்களாவே அறிய படுகிறது.
இன்னும்
சொல்ல போனால் கடவுளின் குணம் மிக குறைந்து சராசரி மனித குணமே ஓங்கி உள்ளது.
அடுத்து,
இவர்கள் உண்மையில் இருந்தார்களா? என்று என்னை கேட்டால் இவர்கள் உண்மையில்
வாழ்திருக்க கூடும்.
ஏனெனில் வரலாற்றை அட்சரம் மாறாமல் சாட்சியுடன் எழுதி வைக்கும்
மரபு மேற்கத்திய ஊடுருவல்லுக்கு பின்பு தான் நம் கலாசாரத்தில் நுழைந்தது.
அதற்க்கு
முன் இருந்த நமது பழக்கம் நாள், திதி, நட்சத்திரம் என குறித்து வைப்பது, செவி வழி புகழ்
மற்றும் புகழ் பாடல்கள் என்ற வகையில் தான் இருந்துள்ளது மற்றும் இவர்கள்
வாழ்ந்ததாக கூறப்படும் அத்தனை இடங்களும் இன்றும் உள்ளது. ஏன் அவர்கள் ஜாதகத்தை
வைத்து இன்றும் ஜாதகம் பார்பவர்களும் இன்றும் உண்டு.
இவர்களை
கடவுளர்கள் என்று பார்ப்பதை விட வரலாற்று நாயகர்கள் என்று பார்த்தால்தான் நமது
தினசரி வாழ்க்கைக்கு வழி காட்டுவார்கள்.
கடைசியில்
எடுக்க போகும் கல்கி,
அது முதல் ஐந்து போல திருவிளையாடலாக இருக்கலாம் அல்லது நம்ம ஒபாமா, மோடி அல்லது ராகுல் ஏன் இதை படிக்கும் நீங்களா கூட இருக்கலாம் இல்லை இனி
மேல் பிறக்கபோகும் மனிதர்களில் ஒருவராகூட இருக்கலாம் – ஒரே தகுதி இவ்வுலகை அழிக்க
கூடியவராக இருக்க வேண்டும்.
கொஞ்சம்
கற்பனை செய்து பாருங்கள் இன்றைய காலகட்டதில் கல்கியை வரைய சொன்னால் அவர் ஜீன்ஸ்
பேண்ட் போட்டு ஜெர்க்கின் அணிந்து தோளில் ஒரு ராக்கெட் லாஞ்சர் சுமத்து பின்
புறத்தில் ஒரு ராணுவ விமானம் முழுவதும் அணுகுண்டோ அல்லது அதை விட சக்தி நிறைந்த
அழிவு பொருளுடன் இருக்கும் படி வரைந்திருப்பார்கள்.
இந்த மனநிலையில் இந்த லிங்கிற்கு சென்று ராமனின் வாழ்க்கை சுருக்கம் படியுங்கள் ராமர் தற்கொலை தான் செய்தார் என்று நம்புவீர்கள்.
--- தொடரும்
//கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் இன்றைய காலகட்டதில் கல்கியை வரைய சொன்னால் அவர் ஜீன்ஸ் பேண்ட் போட்டு ஜெர்க்கின் அணிந்து தோளில் ஒரு ராக்கெட் லாஞ்சர் சுமத்து பின் புறத்தில் ஒரு ராணுவ விமானம் முழுவதும் அணுகுண்டோ அல்லது அதை விட சக்தி நிறைந்த அழிவு பொருளுடன் இருக்கும் படி வரைந்திருப்பார்கள்.//
ReplyDeleteஹாஹா ஹாஹா 10000% கரெக்ட்:-)
வருகைக்கு நன்றி
DeleteHi Thiru, Well. You are giving reason for suicide. But my Question is where you get the ref / evidence of death due to sucide
ReplyDeleteதேனி சகோ ! அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
DeleteOK got it. Thanks
Deleteகற்பனை சூப்பர் ஐயா.
ReplyDeleteவாருங்கள் தனிமரம், சூப்பருக்கு நன்றி ..,
Delete