அவரும்
உணர்வும் – எங்கள் அண்ணாச்சி
கடந்த
ஒரு வாரமாக மனதின் ஓரத்தில் அரித்து கொண்டிருந்த ஒரு நிகழ்வுக்கு இன்று மணி
கட்டும் நாள்.
இன்று ஒரே ஆர்வமாகவும் மனிதர்களின் உணர்வுகளை ஆராயக்கூடிய மன
நிலையில் நான் இருந்தேன்.
இதோ அந்த நிமிடம் ஆரம்பமானது, இதோ இந்த கூடம்
முழுவதும் ஆட்கள் பல தர வயது பல தர பட்ட உணர்வை உடயவர்கள் பல தர பட்ட பணியில்
இருப்பவர்கள் இவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரே நூலுக்கு கட்டுபட்டு கூடியிருந்தார்கள்.
அனைவர் முகத்திலேயும் ஒரு வித சோகம், ஒரு வித விரக்தி, பேசு
பொருள் அனைவருக்கும் தெரிந்தது போல் தோன்றியது.
பொதுவாக இழவு வீட்டுக்கு கூடுகிற
வீட்டில் கூட ஒரு வித சத்ததுடன் இருப்பது நமது கலாசாரம். ஏன் தேசிய கீதம் பாடும்
போது கூட ஒரு சில சத்தங்கள் நமக்கு பழக்கம். எதுவும் இல்லாத ஒரு வித மயான அமைதி
எனக்கு ஆச்சரியத்தை தந்தது.
சம்பிரதாயம் முடிந்து மணி கட்டுபவர்கள் மணியின்
நிலமையையும் கயிற்றின் பலத்தையுமும் விளக்கி கொண்டிருந்தார்கள் கூடத்தில் எந்த வித
ரியாக்சன் இல்லை. அமைதியாக இருந்தார்கள்.
எனக்கு விளக்கங்கள் காதில் விழவில்லை என்
பார்வை கூடத்தில் இருபவர்கள் மேலே இருந்தது.
நான் எனக்குள் கரைந்தேன் ஏன் இந்த அமைதி
எதற்க்கு பேசி தனக்கு தானே சூனியம் வைத்து கொள்ள வேண்டும் என்ற பயமா?
இல்லை வீட்டுக்கு போனதும் "எப்பங்க பர்சசேஸ் போலாம்?" என கேட்கும் மனைவிக்கு
என்ன சொல்லுவது என்ற நினைப்போ!
"அப்பா,
எப்போ எனக்கு புதுடிரஸ்" என காலை கட்டும் குழந்தைகளை என்ன சொல்லி சமாதானம் செய்வது
என்ற யோசனையா?
"அப்பா, எனக்கு என்ன கிஃப்டுப்பா" என கேடக போகும்
வயது வந்த பிள்ளைகளிடம் என்ன சொல்வது என்ற தயக்கமா?
இல்லை,
இந்த வாழ்விற்கும் வசதிக்கும் இவர்கள் தானே காரணம் இதை ஏற்றுக்கொள்வோம் என்ற
பெருந்தன்மையா!!
காரணம் எதுவாகினும் பிசிறு தட்டுவது கூட்டத்தின்
இயல்பு, இயல்பு மாறிய இந்த மௌனம் மனதை பிசைந்தது. இவர்களின் எதிர் காலத்தின் சூனியமே
இந்த மௌனம் என்பது போல இருந்தது.
வெளிச்சமற்ற ஆழ்ந்த இருளின் நிசப்ததில் மெழுகுவர்திகள்
இருளை ஏற்றி தன்னை கரைந்து கொண்டிருப்பது போல இருந்தது.
விளக்கங்கள் முடிந்து
கலையலாம் என சொல்லும் முன்பே கலைந்தனர்.
அங்கிருந்த தேநீரை கூட முக்கால்வாசி பேர்
தொடவில்லை அப்போதும் ஒரு அமைதி அனைவரும்
அவரவர் கடமைக்கு திரும்பினர்.
விளக்கம் கொடுதவர்களின் முகத்தை பார்த்தேன் ஒரு
வெற்றி பெருமிதம் எனக்கு புரியவில்லை எது வெற்றி?
காரணம் ஏதுவாக இருப்பினும் கனத்தை
அமைதியாக சுமந்து சென்ற கூட்டம் எனக்கு தேவர்களாக தெரிந்தார்கள்.
.
என்னை அறியாமல்
எனது கண்களில் கண்ணீர் வந்தது அது எனக்கும் சேர்த்துதான்.
என்று அவர் சொல்லி முடித்தவுடன்
என் கண்களிலும் துளி கண்ணீர் அந்த மௌன கூட்டத்திற்கு.
பின்
குறிப்பு:
எங்கள்
அண்ணாச்சி அவருக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை கண்ணீருடன் சொல்லும் பொழுது அதிசியத்து
போனேன். எல்லோரும் நான் நான் தமக்கு தமக்கு எனும் பொழுது, பிறருக்காக,- சம்பந்தமே
படாத நண்பன் முன் தன் கூட்டத்திற்கே கண்ணீர் சிந்தி புலம்பிய பொழுது அவரின் மனிதம்
மனதிற்குள் அவரை கை கூப்பி வணங்க வைத்தது. அவரின் அனுமதியன்றியே வலை ஏற்றுகிறேன்.
இப்பதிவு அவரின் மனிததிற்கு சமர்ப்பணம். .
No comments:
Post a Comment