Friday, 8 November 2013

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4



ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4


"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் .. அவன்...,"  என்று கண்ணதாசன் பாட போகிறதை அறிந்தோ என்னவோ, கடவுள் மனிதனாய் பிறந்து, அவனின் வாழ்க்கையை அனுபவித்து அதன் போக்கில் வரும் "ஏற்றத்தாழ்வுகளை" தான் கண்ட, கேட்ட, உணர்ந்த அனுபவத்தை வைத்து எதிர் கொள்ளும் சாதாரண மனிதனாகவே ராமன் வாழ்ந்துள்ளான்.

பொதுவாக ஓரு ஆணுக்கு, பெண்ணின் பால் இருக்கும் ஆர்வமானது அதீதம். சம வயது பெண்களிடம் அவர்களின் "பார்வை" தன் பால் ஈர்க்க கூச்சம், கோவம், அதிகாரம், அலட்டல், கெஞ்சல், கொஞ்சல் மற்றும் அன்பு என முயற்சி செய்யும் ஆண் ஒரு முதியவளிடம் நடந்து கொள்ளும் விதமே "அலாதி"யானது. 

சிறுவர்களுக்கு "முதியவள்கள்" ஒரு விளையாட்டு பொருள்! இங்கு வாலிப வயதினர்கோ அவர்கள் அன்பு சுரங்கம்!! முதிந்தவர்களுக்கோ அவர்களே எஜமானி!!! 

சிறு வயதில் கூனியிடம் விளையாண்ட ராமன், சபரி என்ற முதியவளை பார்த்தவுடன்..,  மனைவியை பறிகொடுத்த அவமானம் பொங்க, கூனியிடம் விளையாண்ட விளையாட்டு உறுத்த, சபரியின் அன்பில் கரைகிறான் ராமன்.

இஃது இயல்பு தானே. அது மட்டுமல்ல, அவள் ஆணைக்கு இணங்க, மதங்க மலைநோக்கி பயணிக்கிறான். அங்கு யாரிடம் "நட்பு" வைக்க வேண்டும் என்பது வரை ராமனுக்கு சபரி சொல்லி அனுப்புகிறாள். 

இங்க ஒரு விசயத்தை கவனியுங்கள், சிறு வயதில் ஒரு பெண்ணின் வெறுப்பை சம்பாதித்து.., வாலிப வயதில் தன் புஜபலத்தை நிரூபித்து அதனால் ஒரு பெண் சம்பாதித்து.., அப்ப பார்த்து ஒரு பெண் வரம் பெற.., சம்பாதித்த பெண்ணையும் அழைத்து காட்டுக்கு வந்து அங்கு ஒரு பெண் இவன் சம்மதம் கேட்க இவன் மறுக்க அவள் கோவம் இவன் சம்பாதித்த பெண்ணை புடுங்கி செல்ல.., அவளை மீண்டும் கைப்பற்ற ஒரு பெண் வழி சொல்லுகிறாள்.- "என்ன கொடுமை சரவணா..."

ஆனால் உண்மையில் தொன்னூற்றி ஐந்து சதவீத ஆண்கள் இன்றும் இப்படிதான், நாளையும் இப்படிதான், "உணர்வான பெண்கள்" கை காட்டும் திசையிலே ஆண்களின் ஓட்டம் இருக்கும். இது தான் சராசரியான மனநிலையும் கூட., இது நம்ம ஊரு "குப்பன்", "சுப்பன்" முதல் அங்கிட்டு "பில் கிளிண்டன்"' "ஒபாமா" வரை ஒண்ணுதான். 

"சுக்ரீவன்", "அனுமன்: இவர்களிடம் ராமன் பழகிய விதமும் பெற்ற மற்றும் செய்த உதவிகளும் இன்றும் ஆண் நண்பர்களுக்குள் நடக்கும் "மனோபாவம்" தான், கூட்டணி அமைத்தல், உசுபேத்தி பலம் கொள்ள வைத்தல், ஸ்கெட்ச் போட்டு பொது எதிரியை அழித்தல், கொண்டாடுதல், கொண்டாடுவதை ரசித்தல் என்ற முறையில் தான் போகிறது. 

ராமன் வாலியுடன் நட்பு வைத்திருந்தால் அவன் பட்ட அவமானத்தை ஓரிரு நாட்களிலே துடைத்திருக்க முடியும்,. ஆனால். "வாலி "பலசாலி" உன்னால் அவனிடம் நேரடியாக மோதி வெல்ல முடியாது" என்று சுக்ரீவன் சொன்னதை ராமன் நம்பினான்., இன்னும் சொல்ல போனால் சுக்ரீவனின் ஆதரவும், நட்பும், அவன் நிலமையும் மற்றும் இருப்பும் அவனை நம்ப வைத்தது. இங்கு ஒருவேளை "விபீஷ்ணன்" போல ராமன் "மெய்பொருள்" அறிந்து சுக்ரீவனை வாலியிடம் காட்டி கொடுத்து வாலியிடம் சேர்ந்திருந்தால்.., ராவணன் தானே வந்து சீதையை ராமனிடம் ஒப்படைத்திருக்கலாம்.

பொதுவாக, ஆண்களுக்கு "தான்" என்ற இறுமாப்பு இருக்கும் தன்னை விட பலத்திலும் பொருளிலும் பெரியவர்களை பார்க்கும் போது ஒரு வித தாழ்ச்சியுடன் ஒதுங்கி போவதும், காழ்ப்புணர்வுடன் பார்பதும் சான்ஸ் கிடைத்தால் அவர்களை வெல்ல நினைப்பதும் இயல்பு.

இது ராமனுக்கு வேலை செய்திருக்க வேண்டும். "அவன் என்ன பெரிய "அப்பா டக்கர்" நேரடியாக வெல்ல முடியவில்லை என்றால் என்ன? என் மூளை பலத்தில் வெல்வேன், நான் யார் தெரியுமா? சிவ தனுசையே உடைத்தவானாக்கும்" என்ற கர்வமும், சுக்ரீவன் குழுவினர் தன் தலைமையை ஏற்க வைக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் ராமனை இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க வைத்திருக்க வேண்டும்.

                                                          - தொடரும்


4 comments:

 1. Replies
  1. ஹே ஹே .. இது நக்கல் தானே ....வருகைக்கு நன்றி , தொடர்ந்து வாருங்கள்.,

   Delete
 2. இயல்புகள் வேறுபடும் சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லாம் வெற்றிதான்.அருமையான தொடர் தொடகின்றேன் ஐயா.

  ReplyDelete
 3. வாருங்கள் தனிமரம், தொடர்வதற்க்கு நன்றி ..,

  ReplyDelete