Powered By Blogger

Friday 1 November 2013

ஒரு நிகழ்வு - ஒருநாளிதழ் - ஒருதொகுப்பு- 1


ஒரு நிகழ்வு - ஒருநாளிதழ் - ஒருதொகுப்பு- 1


தியாகு தொடர் உண்ணாவிரதம்

By dn, சென்னை 

First Published : 03 October 2013 03:14 AM IST

காமன்வெல்த் மாநாட்டை இலங்கை நடத்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செவ்வாய்க்கிழமை மாலை தனது ஆதரவாளர்களுடன் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

2-ஆம் நாளாக புதன்கிழமையும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் நாம் தமிழர் கட்சியின்
தலைவர் சீமானும் தியாகுவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.


உண்ணாவிரதப் போராட்டத்தை தியாகு கைவிட வேண்டும்: கருணாநிதி
By dn, சென்னை
First Published : 05 October 2013 03:29 AM IST 


உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு கை விட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு: இந்தியாவின் நிலை குறித்து கருணாநிதிக்கு பிரதமர் பதில் கடிதம்
By dn, புதுதில்லி

First Published : 15 October 2013 08:24 AM IST


இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது கூடாது என்பதை வலியுறுத்தி பல அமைப்புகள் போராடி வருகின்றன. தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவருகிறார். இதற்கிடையில் தி.மு.க தலைவர் கருணாநிதி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் கருணாநிதிக்கு எழுதிய பதில் கடிதத்தில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்த விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும். என்று தெரிவித்துள்ளார்.


பிரதமர் வேண்டுகோள்: உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் தியாகு
By dn, சென்னை
First Published : 16 October 2013 03:19 AM IST


பிரதமர் மன்மோகன் சிங்கின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை (அக்.15) முடித்துக் கொண்டார்

காமன்வெல்த் மாநாடு : பிரதமருக்கு முதல்வர் கடிதம்
By dn, சென்னை
First Published : 17 October 2013 04:11 PM IST


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடைவிதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
By பா.நாகராஜன், சென்னை
First Published : 22 October 2013 10:54 PM IST


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராணி மேரி பெண்கள் கல்லூரியின் சமூக அறிவியில் துறையின் ஓய்வு பெற்ற தலைவர் சரஸ்வதி கோவிந்தராஜ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: இலங்கையில்
நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நம்மாழ்வார், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மற்றும் நான் உள்பட மூன்று பேரும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.



காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது : பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
By dn, சென்னை
First Published : 24 October 2013 12:53 PM IST


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம், அனைத்து கட்சிகளின் முழு ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் எச்சரிக்கை
By Web Dinamani, புது தில்லி
First Published : 24 October 2013 06:28 PM IST


இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா பிறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என்று இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் : நாராயணசாமி
By dn, புது தில்லி
First Published : 24 October 2013 05:11 PM IST

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக தமிழகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மன்மோகன் சிங் நல்ல முடிவாக எடுப்பார் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
        
                                                        -- தொடரும்
                                    

No comments:

Post a Comment