ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 3
காலமும்
இயற்கையும் எப்போதும் நாம் செய்யும் தவறுகளை மன்னிப்பதில்லை. நாம் செய்தது சரி
நாம் தண்டித்து விட்டோம் என்ற பெருமிதம் அடங்கும் முன்பே நம்முடைய நாம் என்ற
எண்ணத்தை இயற்கை அழித்து விடும்.
இது இங்கு உண்மையானது.
எண்ணங்களும், உணர்வுகளும், கோவங்களும் தொட்டு தொடர்ந்து பரவ கூடியது.
லட்சுமணனின் கோவம் சூர்ப்பணகயை அவமான
படுத்தியது.
அவளின் கோவமோ கரன் அவன் சகோதரன் மற்றும் மாரீசனையும் பலி கொடுத்து
அதோடு ராமனின் வாழ்வின் அழியா களங்கத்தை ஏற்படுத்தியது.
ஒரு நிமிடம் யோசித்து
பாருங்கள் ராமன் சூர்ப்பணகையின் காதலை ஏற்று கொண்டிருந்தால் கிருஷ்ணன் மாதிரி
அல்லது நம்ம முருகன் மாதிரி இருவர் இருபுறமும் நடுவில் ஒருவராக நமக்கு காட்சி
அளித்து கொண்டிருந்து இருந்திருப்பார்.
ராவணன் கடல் கடந்து வந்து சீதனம் கொடுத்த
நாளை கொண்டாடி கொண்டு இருந்திருப்போம்.
முன்னமே சொன்னது போல ராமனின் சூழ்நிலையும்
அதனால் ஏற்பட்ட மனநிலையும் அவனுக்கு சூழ்நிலையை நிதானமாக அணுக முடியாமல் போனது
தான் உண்மை.
ராமனின் வரலாறு உண்மை என்ற கோணத்தில் பார்த்தால் எனக்கு தெரிந்து
இதான் நம்ம வரலாற்றில் பதிவு செய்த முதல் ஈவ்டீசிங் ஆக இருந்திருக்க கூடும். இந்த
வராலாறு போதிக்கும் முக்கியமான உளவியல்களில் இதுவும் ஒன்று. அது கடவுளே ஆனாலும் அல்லது தன்னிகரற்றவனே
ஆனாலும் ஈவ்டீசிங் செய்தால் அதன் பலன் விபரீதமானது. அவன் வாழ்க்கையை புரட்டி போட
கூடியது.
இது வரை ராமனின் வாழ்க்கை அவன் உணர்விலும் அவன் கட்டுபாட்டிலும் இருந்தது. இதற்க்கு இந்த
நிகழ்வுக்கு பிறகு அனைத்தும் அவன் உணர்ந்த பெண்களாலே அல்லது அவர்களை சேர்ந்தவர்களாலே
கட்டுபடுத்த பட்டது.
மனைவியை காணவில்லை என்றவுடன் ஏற்படும் வெறுமையும் இயலாமையும் ஆற்றாமையும்
அதானால் ஏற்படும் கோவத்திலும் லட்சுமணனை பிரியாமல் உடன் வைத்து பிரச்சினையை எதிர் கொள்வது
உண்மையில் கவனிக்க வேண்டிய ஒரு உளவியல். இயல்புக்கு மாறிய இந்த பண்பு அவனை பார்த்து
அதிசியக்க வைக்கிறது.
யார் செய்தார்கள்?எதனால் இது நடந்தது? எந்த பக்கம் போயிருப்பார்கள்? உண்மையில் அந்த சில மணி துளிகள் அவள்
உயிரோடிருப்பாளோ, சித்திரவதையில் சிக்கி வதை படுவாளோ? என இருவரும் தவித்து வருந்தி இருப்பார்கள்.
அதிலும் ராமன் தன் தம்பியை பார்க்கும் போதெல்லாம் அவன் கூனி குறுகி செயல் இழந்து தரை
பார்த்து நின்றிருப்பான். எது வரை? ஜடாயுவை பார்க்கும் வரை.
ஜடாயுவின்
வார்த்தைகள் தேட வேண்டியவர்களை ராமனுக்கு தெளிவு படுத்தும் முன் லட்சுமணனுக்கு நிம்மதி
பெரு மூச்சை வர வைத்திருக்கும்.
.ஜாடாயு
செய்த உதவி என்பது மிக பெரியது, ராமனுக்கு நேர்ந்த அவமானத்தை துடைக்கும் வழிக்கு ஜடாயு
வார்த்தைகளே வழி காட்டி இன்னும் சொல்ல போனால் தந்தை மகனுக்காற்றும் உதவி போல் அவனுக்கு
தோன்றி இருக்கவேண்டும். ஜடாயு உருவில் தசரதனை அவன் பார்திருக்க வேண்டும்.
பரதன்
தசரதன் இறந்ததை சொல்லி கூப்பிடும் பொழுது அங்கயே அவருக்கு வேண்டிய கிரியைகளை செய்து
விட்டு கடந்து வந்த ராமனின் மனம் இங்கு பேதலிக்கிறது.
அவமானமும்
இயலாமையும் உட்சத்தில் இருக்கும் பொழுது பெற்றோரை நினைப்பது மனித இயல்பு.
தசரதனுக்கு
கிடைக்க வேண்டிய மரியாதை ஜடாயுக்கு கிடைக்கிறது.
இன்னும்
சொல்ல போனால் ஒன்றுக்கு பதில் மற்றொன்று என்பது பரிகாரம் என்ற மனநிலை தான் இது
.
அதாவது இருக்கும் பொழுது பெற்றோரை
தவிக்க விடுவது இறந்த பின்பு
அமாவாசை விரதம் இருந்து காக்கைக்கு உணவு படைத்து விட்டு
சாப்பிடும்
குணம் தவிர வேறு என்னவாக இருக்க கூடும்.
- தொடரும்
/அதாவது இருக்கும் பொழுது பெற்றோரை தவிக்க விடுவது இறந்த பின்பு
ReplyDeleteஅமாவாசை விரதம் இருந்து காக்கைக்கு உணவு படைத்து விட்டு சாப்பிடும்
குணம் தவிர வேறு என்னவாக இருக்க கூடும். /
மனதை பாதித்த வரிகள், இருக்கும்போது அவர்களின் அருமை தெரியாது .
--சரஸ்வதி
ஆம். நன்றி தொடர்ந்து வாருங்கள்
Deleteஅவமானமும் இயலாமையும் உட்சத்தில் இருக்கும் பொழுது பெற்றோரை நினைப்பது மனித இயல்பு.//100 வீதம் நிஜம்.
ReplyDeleteவாருங்கள் தனிமரம், கருத்திற்கு நன்றி!!
ReplyDelete