மழையும் மாமா நகரமும்
என்ன நடக்கிறது ? சென்னையில் நல்ல மழையப்பா!! அட ஏன் நம்ம சேர்வாஞ்சேரியில் கூட மழையாம் பத்தெரி வரைக்கும் மழை கொட்டுதாம் .நமக்கு மட்டும் ஏன் ??
நம்மை தாண்டி இந்த தங்கபெருமாள் கோவிலில் மழையாம் என்னத்த சொல்றது..
இந்த தண்ணியை நினைத்தாலே தலை சுற்றுகிறது.
பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு போர் வண்டியை கொண்டு வந்து வாஸ்து பார்த்து போர் போடும் போது 120 அடியில் தண்ணி ஆர்டிசியான பாய்ந்த போது வண்டி காரன் 150 க்கும் மேல அமுக்க முடியல செம பிரஷர் போதும் ஸார்.. இனி உங்களுக்கு எப்போதும் தண்ணி பிரச்சினையே வாராது ஸார் நு அவன் சொல்லும் போது ஒரு பெருமையா இருந்தது .
பிறகு நகரின் அபரிமிதன வளர்ச்சி திகைப்பை தந்தது. எங்க பார்தாலும் லோனை விதைத்து காங்க்ரிட் முளைத்து காடுகளாய் படர்ந்தது. சிட்டு குருவிகளின் கூட்டம் போல் மக்கள் கூட்டம் சந்தோஷத்தை தந்தது.
பக்கத்து வீட்டுக்காரர் போர் போட்ட பொழுது 200 அடியில் தண்ணி வந்தது என்று சொல்லும் பொழுது நமக்கு தண்ணி ராசி என்று நினைக்க வைத்தது.
தார் ரோடுகளெல்லாம் சிமெண்ட் ரோடுகளாய் மாறி வழுக்க ஆரம்பித்ததும்..ஏதோ சிங்கபூரில் வாழும் உணர்வு வந்தது. வருபவர்கள் நகரை பார்த்து ஆச்சரியபடும் பொழுது நகரில் வீடு வைத்திருப்பதை நினைத்து பெருமையாக இருந்தது.
கடந்த வருடம் மழை பொய்த போது எதுவும் மாற்றம் தெரியவில்லை. மார்ச் மாத வாக்கில் டீ கடையில் இப்போ எல்லாம் 400 அடி போர் போட்டா..தான் தண்ணீர் வருது என்று மக்கள் பேசும் போது மனம் ஆகா என்றது. ஏப்ரல் மாத வாக்கில் வீட்டு டேங்க் நிரம்ப அரை மணி நேரத்திற்கு பதிலாக ஒன்னரை மணி நேரம் எடுக்கும் பொழுது மனதில் லேசான பயம் எட்டி பார்த்தது.
சரி சரி விட்ரா போணா தீனா .. நம்ம சம்ப்பை பார்போம். நமக்குதான் நகராட்சியில் இருந்து தண்ணீர் வருதே அப்படினு நினைத்து ஓபன் பண்ணினால் மனம் குளிரும்படி தண்ணீர் சல சலத்தது. கையோட பிளம்பரை அழைத்து மோட்டரை சர்வீஸ் செய்து தண்ணீரை டேங்கில் ஏற்றியதும் நாமெல்லாம் ஆறு??? என்று தோனியது...
மே மாதம் எதிர் பார்த்தது போல போரில் இரண்டு குடம் தண்ணீருக்கு பின்னால் காற்று தான் வந்தது. நமக்கு என்ன ..நாம சம்ப் மோட்டரை போடுவோம் என்று போட்டால் அங்கு ஒரு குடம் தான் .. வேகமாய் போய் திறந்தால் அதுவும் தரையாய் இருந்தது.
அக்கம் பக்கம் விசாரிக்க இப்ப எல்லாம் மூன்று நாளைக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருது அதுவும் ஒரு மணி நேரம் தான்.. ஆனா இந்த தெரு குழாயில் இரண்டு நாளைக்கு ஒரு முறை வரும் பிடித்து கொள்ளுங்கள் சரி தான் ..என்று திரும்பி பார்த்தால் தாம்பரம் ஸ்டேஷனில் பீக் ஹவரில் மின்சார ரயில் டிக்கெட் கியூ போல இருக்க ..
நம்ம அண்ணாச்சிக்கு போன் போட்டா அவரு ஹி ஹி உனக்கு இப்போ தானா ?? எங்களுக்கு எல்லாம் அப்பமே .. சரி சரி நான் சொல்ற நம்பருக்கு போன போடு என நானும் போன் பண்ணா.. அந்த பக்கம் சார் அட்ரெஸ் சொல்லுங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு இருப்போம் என்றவுடன் மனதில் ஒரு நம்பிக்கை எழுந்தது.
ஒரு அரை மணி நேரத்திற்குள் ஒரு பையன் வந்து சார் இது தானே இந்த வீட்டு நெம்பர்? ஆமாப்பா! உங்க பேரு தானே போணா தீனா ?? ஆமமாப்பா என நான் சொல்ல உங்க வீட்டுக்கு வாட்டர் வந்துருக்கு சம்பை காட்டுங்கள் என நான் வெளியே எட்டி பார்த்தால் ஒரு டிராக்டர் அதில் ஒரு குட்டி டேங்கருடன் உறுமி கொண்டிருந்தது. சரி என்று சம்ப்பை காட்ட திறந்து விட்ட தண்ணீர் பாதி டேங்கர் குறைவதற்குள் சம்ப் வழிய அவன் ஸார் வேறு எங்காவது பிடித்து வைத்து கொள்ளுங்க என்றான் நானோ எனக்கு இது போதும்பா என்றேன் அவனோ இது உங்களுக்கு வந்த நடை பாதி பிடிதாலும் முழுவதும் பிடிதாலும் எனக்கு 800 ரூவா கொடுக்கணும் ஸார் எங்கவாது பிடிச்சி வைத்துக்கொள்ளுங்கள் என்றான். என்னாது 800 ருவாவா என நான் வாயை பிளக்க அவன் உங்ககிட்ட அண்ணாச்சி சொல்லலையா? என ..
பிறகென்ன எதிர்த்த வீட்டுக்காரரின் சம்பில் மீதிதண்ணியை நிரப்பி விட்டு அவனிடம் பணத்தை அழுதேன். மனம் ஒரு நாளைக்கு 400 ரூவா என்றால் மாதம் 12000 ருவாவா சரிதான் வாங்குற சம்பளத்தை தண்ணீருக்கு கொடுத்து விட்டு அந்த தண்ணீரில் துணியை நனைத்து வயிற்றில் போர்த்தி கொள்ள வேண்டியது தான் கூவியது.
அடுத்த நாளில் இருந்து நானும் என் வீட்டின் உறுப்பினர்களும் தெரு கொழாயின் லைனில் இடம் பிடிக்க குடம் போட்டு காக்கிறோம். அதுவும் பழக பழக பழகிவிட்டது.
ஒரு நாள் இரவு சாப்பாடு முடித்து நானும் அண்ணாச்சியும் தெரு முனையில் உள்ள மூடிய சைக்கிள் கடை வாசலில் உட்கார்ந்து தம் அடிக்கும் பொழுது இந்த தண்ணீரை பற்றி பேச்சு வந்தது. இதுக்கு ஒரு முடிவில்லையா என நான் புலம்ப அவர் கவலைபடாத.. நடக்கிறது அம்மா ஆட்சி கண்டிப்பா மழை கொட்டோ கொட்டுவென்று கொட்டி வெள்ளம் வரும் பாரு எல்லாம் சரி ஆயிடும் அப்படினு ஒரு போடு போடறார்.
அது சரி இதை படிக்கிற நீங்க சொல்லுங்க அம்மா ஆட்சியில் மழை பெய்து வெள்ளம் வந்து தண்ணீர் பஞ்சமே இருக்காதுங்களா ... பிளீஸ் சொல்லுங்களேன் .....
- வீ பொ திரு
No comments:
Post a Comment