Powered By Blogger

Saturday 19 October 2013

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் ?- ஒரு உளவியல் பார்வை



ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் ?- ஒரு உளவியல் பார்வை

ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும், சர்ச்சைகளும் பல நூறு ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ராமர் உண்மையில் வாழ்ந்தார் என்ற கோணத்தில் அவரின் இறுதி முடிவை ஏன் அப்படி எடுக்க வேண்டும்? என்ற ஒரு உளவியல் பார்வை மட்டுமே,.

ராமனின் குணாதிசியம் என்பது கவனிக்க பட வேண்டிய ஆராய பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

அப்பன் தன் சிற்றன்னைக்கு கொடுத்த வாக்கிற்கு உட்பட்டு அவனை பிரிந்து அவரின் இறப்பிற்கு தானே காரணம் ஆகிறான். சாபம், வரம் என்று காரணம் பல சொன்னாலும், "என் அம்மா இருக்க, நான் இருக்க உன் கடைசி மனைவியின் ஆசை உனக்கு பெரிதாக உள்ளதா? நீயும் வேண்டாம், உன்னால் வரும் அரசும் வேண்டாம்" என்ற உளவியலே இதற்க்கு காரணமாய் இருந்திருக்க வேண்டும்.

ராமனின் ஏக பத்தினி விரதம் என்பதும் அவன் அப்பாவினால் ஏற்பட்ட தாக்கமாய் தான் இருக்க வேண்டும். தன் தந்தை செய்த தவறை அதனால் குடும்பத்தில் ஏற்படுகின்ற குழப்பத்தை பார்த்து இந்த தவறை தானும் செய்யகூடாது என்ற உளவியலே இருந்திருக்க கூடும்.

சரி, காட்டில் மனைவி மற்றும் தம்பியுடன் இருக்கிறான். சூர்ப்பனகை வருகிறாள் தன் காதலை சொல்லுகிறாள். ராமன் இவள் காதலை ஏற்கவேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். இவன் நிராகரிக்கிறான். அத்துடன் என் தம்பியை கேட்டுப்பார் என்று சொல்லி அவளை அவனிடம் அனுப்பி வைக்கிறான். 

இது என்ன மனநிலை? உற்சாகத்தில் இருக்கும் மனிதர்கள் பலவீனமானவர்களை மாற்றி மாற்றி கோர்த்து விட்டு விளையாண்டு பார்க்கும் மனோபாவம்.

இங்கும் விளையாட்டு வினையானது. 

இங்கும் உளவியலை கவனிக்க வேண்டும் ராமனின் மனநிலையில் அவன் தம்பி இருக்கவில்லை.

ராமன் காட்டில் இருந்தாலும் அவன் மனைவியுடன் உள்ளான். ஆனால் லட்சுமணனோ மனைவியை பிரிந்து தனியே உள்ளதால் ஏற்பட்ட கோவேமே அவன் செய்கைக்கு காரணமாய் இருந்திருக்க வேண்டும்.இயலாமையின் வெளிப்பாடு அவன் காட்டிய வன்முறை.

                                                     -- தொடரும்

8 comments:

  1. திரு. ராமன் தற்கொலை செய்து கொண்டாரா! நம்பமுடியவில்லை. விளக்கம் தேவை.

    ReplyDelete
    Replies
    1. தேனி சார்! கண்டிப்பாக இதற்கு விளக்கமாக ஒரு இடுகையில் தருகிறேன்- இன்றே

      Delete
  2. The great injustice that he has done to seetha, vali,soorpanakai and Ravanan might be the dominating factors that compelled him to commit suicide by drowning himself in sarayu river.yar kanda sir,'epporul yaar yaar vai ketpinum,apporul meipporul kanpatharivu ' enpathai unaramal thaan seitha,seiyakkoodathavaikalaippatri ninaithu varunthiyirukkalam..... illaiyel sivabakthanana avar Himalayathil yogikal iraiyadisera punniya thadakathil mungi moksham pera tharkolai seithirukkalam.

    ReplyDelete
    Replies
    1. துளசி சார், வருகைக்கு நன்றி, நீங்கள் சொன்ன மாதிரி கூட இருந்திருக்கலாம். மெய்பொருளை காணும் முயற்சியே இது. அப்புறம், பார்த்து சூதானமாக இருங்க இணைய ஆழ்வார்க்கடியான்கள் தங்கள் கைதடியை சுழட்டி உங்கள் மண்டையில் ஒரு போடு போட்டு விட போகிறார்கள். - வருகைக்கும் விளக்கதிற்கும் நன்.றி

      Delete
  3. Munivarkal thadakathil mungi uiyirai udalilirunthu pirithu iraivanadi serppathu pol Ramanun sarayu nathiyil mungi moksham petriukkalam.

    ReplyDelete
    Replies
    1. இப்படி செய்வது சரியா? என்ன அலங்கார வார்த்தை போட்டு கூறினாலும் இதற்கு பெயர் தற்கொலை தானே சகோ .

      Delete
  4. தான் மட்டும் போகாமல் ஊரையே தன்னோடு சேர்த்து வைகுண்டம் அழைத்துப் போனார் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் 'ஜல சமாதி' !

    ஊரையே என்று சொன்னாலும்........... தன் பிள்ளைகளை அரசாள விட்டுட்டுப்போனார் என்றும் சொல்வார்கள். ஆளில்லாத ஊரில் அரசாள என்ன இருந்திருக்கும்?

    நானும் பலமுறை இதைப்பற்றி நினைத்துப் பார்த்திருக்கேன்.

    ஒரு வேண்டுகோள்.

    இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கினால் பின்னூட்டம் இடுபவர்களுக்கு நிம்மதியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ! நமது தலைவர்கள் ராமராஜ்யம் எனும் பொழுது எனக்கும் இந்த நினைவு வரும் நம் அனைவரையும் வைகுண்டம் அழைத்து சென்று விடுவார்களோ.. என்று நினைப்பேன்.

      உங்களின் ஆணை நிறைவேற்று பட்டு விட்டது.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete