Powered By Blogger

Saturday 28 December 2013

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 5

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 5

குறிப்பு : தொடர் வேலை காரணமாய் பதிவு தாமதமாய் ஆனதிற்கு மன்னிக்கவும். 

 

"சூழ்நிலை"- கடவுளாக மாற இளம் பருவத்தில் வந்த துக்கத்தினால் எழும் எழுச்சி கண்ணை மறைக்க ராமன் விட்ட அம்பு குறி தவறாமல் இலக்கை தாக்கியது. 

அம்பு பிளந்த பிளவில் இருந்து "தர்மம்" கொப்பளித்து கேள்வி கேட்க..., அதற்க்கு ராமன் சொன்ன பதில்கள் எல்லாம் சப்பைகட்டுதான்.. வன நரர்களை (காட்டில் வசிக்கும் மனிதர்கள்) வானரங்கள் (குரங்குகள்) என ஆக்கியதுதான் மிச்சம், மனம் இருக்கும் மனிதர்கள் எல்லோருக்கும் இம் மாதிரி நிக்ழ்வுகள் "வடுக்கள்" தான். ராமனுக்கும் இது பொருந்தும்.

பலத்தை காட்டிய பலவான் பின்னே படைகள் சேர்வது இயல்புதானே! ராமனுக்கும் அது நடந்தது. படைகள் சேர, சேர அது அவனை இன்னும் பலவானக மாற்றியது அவனால் மிக பெரிய சேனையை கட்ட முடிந்தது. எட்டு திக்கும் ஆளை அனுப்பி அவன் மனைவியை தேட முடிந்தது.

ஒரு நிமிடம் படிப்பதை நிறுத்தி கற்பனை செய்து பாருங்கள், நீங்களும் உங்கள் சகோதரரும் உங்களுக்கு சகோதரர் இல்லையென்றால் உங்கள் நண்பரும் ஒரு திக்கு தெரியாத காட்டில் ஒரு பெருத்த அவமானத்துடன் கைவிட பட்ட நிலையில் சிக்கி உங்கள் உங்களால் மட்டும் முயற்சித்து ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதில் ஒரு சந்தர்பம் உருவாக்கி அதில் சாமர்த்தியமாக வெற்றி பெற்று அதன் மூலமாக உங்களுக்கு பல நூறு மனிதர்கள் கட்டு பட்டு அவர்கள் உங்களை ஒரு அரசன் அளவிர்க்கு நடத்துவார்கள் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

துக்கம் மறந்து கர்வமும் பெருமையும் மனதில் ஏற வேண்டும். ஏறினால் தான் "மனிதன்", அத்துடன் ஒன்றை நினைவு படுத்தி கொள்ளுங்கள். அது குருதிபுனலில் வரும் வசனம் "வீரம் என்பது பயம் இல்லாத மாதிரி நடிப்பது" இதை இப்படியும் சொல்லலாம் "உச்ச கட்ட பயம் கவ்வும் போது தான் வீரமே பிறக்கிறது" பிறகு, அதுவே "போதை" ஆகி போகிறது. 

இங்கும் அது தான் உங்களுக்கும் நடக்கும். கர்வம் உச்சதிற்கு போகும் போது மனம் கர்வமே இல்லாத மாதிரி நடிக்க சொல்லும் அதன் வெளிப்பாடு அன்பாய் பொங்கும் பிறகு அதுவே உலகின் உச்சிக்கு உங்களை தூக்கி விடும். 

அனைவரும் உங்களை "நல்லவர்", "வல்லவர்" என்று சொல்ல வேண்டும் என ஏங்க வைக்கும் இந்த நல்லவர், வல்லவர் என்ற வார்த்தைகளுக்காக நீங்களும் எதை வேண்டுமானாலும் இழப்பீர்கள்.

என்ன கற்பனை பயமுறுத்துகிறதா? ஆனால் இது நிஜம்! மனம் விட்டு உங்கள் மனதிடம் கேட்டு பாருங்கள் அது உண்மையை சொல்லும்.

ராமனுக்கும் அன்பு பொங்கியது பாற்கடலாய்.. அந்த அன்பில் மூழ்காதவர்கள் தான் யார்?


மூழ்கியவர்கள் அனைவரும் "முத்து" எடுத்தார்கள் ஏன் இன்னும் முத்து எடுக்கிறார்கள்.(என்னையும் சேர்த்துதான்). 


நம்ம அனுமனுக்கோ "முத்து மலையே" கிடைத்தது.


நல்ல வளமான மண்ணும் நீரும் ஓளியும் ஊக்கமாய் வீரியமான 
'சிறு கடுகு"க்கு கிடைத்தால் அது உருவாக்கும் தண்டும் இலையும் எவ்வளவு பெரியது, கடுகு செடியை பார்த்தவர்களுக்கு தெரியும் கடுகின் விஸ்வரூபம் எவ்வளவு பெரியது என்பது.

இங்கு "வீரிய வித்து" அனுமனுக்கு ராமனின் அன்பு என்கிற ஊக்கம் அவனை விஸ்வரூபம் எடுக்க வைத்தது. அந்த விஸ்வரூபம் அவனையே ஆச்சர்ய பட வைத்தது எல்லாமே ராமன் என அவன் மனம் நம்பியது இந்த எண்ணம் அவனை ராமனிடம் சரணடைய வைத்தது.

அனுமனை பார்க்கும் பொழுது எல்லாம் தன் அன்பின் பலம் ராமனுக்கும் சந்தோஷத்தை கொடுத்திருக்கும். கூடவே என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கும்...,          
                                                   -- தொடரும் 

6 comments:

  1. சிந்திக்க வைக்கும் பார்வை.
    மிச்சப் பகுதிகளையும் படிக்கத் தூண்டுகிறது.

    ராமன் 'தற்கொலை' செய்து கொண்டான் என்று சொல்லவே துணிவு வேண்டும். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பூரியம் என்றால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. தமிழ் எண்

      பூரியம் = 100000000000000000000

      Delete
  3. வலைச்சரத்தில் இன்று மகுடம் ஏறியது தங்கள் தளம் தொடர் பதிவை இன்றுதான் படிகின்றேன் மிகுதியும் தொடர்வேன்...

    ReplyDelete